50ரூபாய் கொடுப்பணவு விடயத்தில் ஏன் ரணிலுடைய அரசாங்கத்தை விட்டு வெளிவரவில்லை???. – மறுதபாண்டி ராமேஸ்வரன் கேள்வி.

50ரூபாய் கொடுப்பணவு விடயத்தில் ஏன் ரணிலுடைய அரசாங்கத்தை விட்டு வெளிவரவில்லை???. – மறுதபாண்டி ராமேஸ்வரன் கேள்வி.

ரணில்விக்ரமசிங்க நவீன்திஸாநாயக்க ஆகியோரை கூறைகூறும் முன்னால் அமைச்சர்கள் மக்களுக்கு வழங்கபடவிருந்த 50ரூபாய் கொடுப்பணவு விடயத்தில் ஏன்
ரனிலுடைய அரசாங்கத்தை விட்டு வெளிவரவில்லை?. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா வேட்பாளர் மறுதபாண்டி ராமேஸ்வரன் கேள்வி எழுப்புகிறார்.

ஜக்கிய தேசிய அரசாங்கத்தில் மலையகத்தில் அமைச்சர்கலாக இருந்தவர்கள் மக்களுக்கு வழங்கபடவிருந்த 50ரூபாய் கொடுப்பணவு விடயத்தில் ஏமாற்றியதாகவும் ரனில்விக்ரமசிங்க மற்றும் நவீன்திஸாநாயக்கவை இன்று குறை கூறுபவர்கள் ஏன் அப்போது ஜக்கிய தேசிய அரசாங்க்தில் இருந்து வெளியேர வில்லையென இலங்கை தொழிலாளர் காங்ரஸின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான மறுதபாண்டி ராமேஸ்வரன் கேல்வி ஏழுப்பியுள்ளார். 03.07.2020 வெள்ளிகிழமை டிக்கோயா பட்ல்கல பகுதியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த வேட்பாளர் மறுதாபண்டி ராமேஸ்வரன்…

“ரனில்விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் ஜந்துவருட காலப்பகுதியில் மலையக மக்களுக்கு இவர்கள் செய்து கொடுத்துள்ள அபிவிருத்தி திட்டங்கள் என்ன பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய்,  50ரூபாய்,  140 ரூபாய் போன்ற கொடுப்பணவுகளை இலங்கை தொழிலாளர் காங்ரசும் மறைந்த தலைவர் அமார் ஆறுமுகன் தொண்டமானும் தான் அதனை தடுத்ததாக கூறினார்கள் ஆனால் இன்று கூறுகிறார்கள் ரனிலும் நவீன்திஸாநாயக்க ஆகியோர் தடுத்ததாக  அன்று அதே அரசாங்கத்தில் தான் நவீன் அமைச்சராகவும் ரனில் பிரதமராகவும் இருந்தார்.

இதே எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இருந்திருந்தால் இதனை செய்திகான்பித்திருப்பார் கடந்த மஹிந்தராஜபக்ஸ அரசாங்கதத்தின் போது
எங்களது கோறிக்கைகள் சில நிறைவேறாமல் இருந்த போது அரசாங்கத்தை விட்டு வெளியில் வர நாம் தயாராக இருந்தோம். தோட்டபகுதிகளுக்கு மின்சாரம்
வழங்கபடாமையினால் அமைச்சி பதவியினை இராஜினாமா செய்து விட்டு வெளியேறிய ஒரே தலைவர் மறைந்த அமார் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள். மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகிறது மக்களுக்கு வீடு அமைத்து கொடுத்தோம் அதனை செய்து கொடுத்தோம் இதனை செய்து கொடுத்தோம் என்பதனை வைத்து கொண்டு தினந்தோரும் அரசியல் செய்வதை விட எதிர்காலத்தில் மக்களை நாம் எவ்வாறு வழிநடத்துவது என்பது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் செயற்பட்டு கொண்டிருக்கிறது தேர்தலுக்காக ஆயிரம் ரூபாய் சம்பளம் விடயத்தில் மக்களை ஒரு போதும் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் காட்டி கொடுக்காது தற்பொழுது தொழிலாளர்கலாள் பறிக்கபடும் தேயிலை கொழுந்தின் அளவிற்கே ஆயிரம் ரூபாய் சம்பளத்தை நாம் நிச்சயமாக பெற்று கொடுப்போம் ஆயிரம் ருபாய் சம்பளத்தை நாம் பெற்று கொடுக்கும் போது இலங்கை தொழிலாளர் காங்ரஸின் அங்கத்தவர்களுக்கு மாத்திரம் பெற்று கொடுப்பதில்லை ஒட்டுமொத்த அனைத்து தொழிலாளர்களுகும் பெற்று கொடுப்போம். ஒவ்வொரு தோட்டபகுதிகளில் வாழுகின்ற மக்களுக்கு 50 மற்றும் 100வீடுகள் வழங்கபடுவதனால் வீட்டு பிரச்சினை தீரபோவதில்லை அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவு தோட்டபுறங்கள் கிராமமாக மாறவேண்டும் என்பதே அதனை நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம்”. – என குறிப்பிட்டார்.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

 514 total views,  6 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!