காதலர்களின் கைவரிசையால் மஸ்கெலியாவில் 15 இலட்சம் பெறுமதியான நகை திருட்டு!!

காதலர்களின் கைவரிசையால் மஸ்கெலியாவில் 15 இலட்சம் பெறுமதியான நகை திருட்டு!!

15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 பவுன் நகையை களவாடியதாக யுவதி ஒருவரும் அவரது காதலரும் மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்தார்.
மேலும், மஸ்கெலியா நகரில் உள்ள வியாபார ஸ்தலம் ஒன்றில் பணிபுரிந்த யுவதி அந்த ஸ்தாபன உரிமையாளரின் மனைவியுடைய தங்க மாலையை களவாடி சென்றதாக சந்தேகத்தின் பேரில் 3ஆம் திகதியன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டதுடன் இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தை சேர்ந்த 19 வயதுடைய யுவதியும் காட்மோர் தோட்டத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞருமாவர்.

3ஆம் திகதியன்று தனது வீட்டில் உள்ள அலுமாரியை திறந்து நகை பெட்டியில் இருந்த 15 பவுன் தங்க மாலை காணவில்லை என்பது தெரியவந்தன் பின்னர் பணியாற்றி வந்த யுவதியின் மேல் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததற்கு அமைய சந்தேக நபரை ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விசாரணை மேற்கொண்ட போது, மஸ்கெலியா நகரில் இயங்கி வரும் தங்க நகை அடகு பிடிக்கும் ஸ்தாபன மொன்றில் 4 இலட்சம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ளதாகவும் அந்த பணத்துடன் மேலதிகமாக 30000ரூபாய் சேர்த்து 4இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய்க்கு பிற்கொடுப்பனவு முறையில் முச்சக்கர வண்டி ஒன்றை பெற்றுள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அத்துடன் சந்தேக நபரின் வாக்குமூலத்திற்கு அமைய காட்மோர் தோட்ட கல்கந்தை பிரிவை சேர்ந்த 20 வயதுடைய நபரிடமிருந்து முச்சக்கர வண்டியை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்விசாரணையை அட்டன் வலய அதிகாரி சூழனி வீரரட்னவின் பணிப்புரை யில் இப்பகுதிக்கு பொறுப்பான ரசிக்க ரட்நாயக்க மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டாரவின் வழிகாட்டலின் கீழ் மஸ்கெலியா பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அதிகாரி ஆனந்த பிரேம சிறியுடன் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸார் இணைந்து மேற்கொண்ட புலன் விசாரணையில் படி சந்தேக நபர்கள் இருவரையும் இரண்டு மணிநேரத்திற்குள் கைது செய்யப்பட்டு 4ஆம் திகதியன்று அட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 

நீலமேகம் பிரசாந்த்

 10,486 total views,  6 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!