பாரத்தின் வெற்றியை உறுதிப்படுத்தினார் ஜீவன்.

பாரத்தின் வெற்றியை உறுதிப்படுத்தினார் ஜீவன்.

கண்டி மாவட்ட வேட்பாளர் பாரத் அருள்சாமியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் இ.தொ.கா.வின் செயலாளருமான ஜீவன் தொண்டமான் கண்டி மாவட்ட தேர்தல் பணியகத்திற்கு வருகைத் தந்தார்.

இளைஞர்களின் பேராதரவை பெற்ற ஜீவன் தொண்டமான் மற்றும் பாரத் அருள்சாமி ஆகியோரை காண, கண்டி தேர்தல் பணியகத்தில் அலையென திரண்டிருந்த இளைஞர்களின் அமோக வரவேற்பை கண்டு நெகிழ்வுற்ற ஜீவன் தொண்டமான், பாரத்தின் வெற்றியை உறுதி செய்துவிட்டோம் என்றவாரே காரியாலயத்திற்குள் நுழைந்தார்.

காரியாலயத்திற்குள் வருகைந் தந்த ஜீவன் தொண்டமான், தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஜயாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்ததுடன், காரியாலயத்தில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர்களின் சந்திப்பில் கலந்து கொண்டார். இதன் போது, மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டதுடன், கண்டியில் ஏற்கனவே தனக்கென தனியொரு இளைஞர் படையை தக்கவைத்திருக்கும் பாரத் அருள்சாமியின் வெற்றியை பலப்படுத்தும் வகையில் கலந்து கொண்ட நுவரெலியா உள்ளிட்ட இளைஞர்களின் பேராதரவை பெற்று ஜீவன் தொண்டமான் கண்டி மாவட்டத்தில் பாரத் அருள்சாமியின் வெற்றியை உறுதிப்படுத்திவிட்டார்.

இளைஞர்களின் பேராதரவை பெற்ற இருவரும் இளைஞர்களிடம் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன், அவர்களுடன் சகஜமாக பேசும் பக்குவத்தினால் இருவருக்கு இளைஞர்களின் ஆதரவு பெருகியுள்ளது. இந்த நிலையில், பாரத் அருள்சாமி, ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஒரே தமிழ் வேட்பாளர் என்பதினால் கண்டி வாழ் தமிழ் மக்களின் ஆதரவில் வெற்றியை நோக்கிச் செல்கின்றார்.

 

(க.கிஷாந்தன்)

 1,108 total views,  4 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan