மஸ்கெலியா நல்லதண்ணீர் பிரதான வீதியில் மண்சரிவு போக்குவரத்து துண்டிப்பு.

மஸ்கெலியா நல்லதண்ணீர் பிரதான வீதியில் மண்சரிவு போக்குவரத்து துண்டிப்பு.

மஸ்கெலியா நல்லதண்ணீர் பிரதான வீதியில் மண்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லதண்ணீர் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மோகினி எல்ல பகுதியில் இன்று (07) திகதி 10 மணியளவில் பாரிய கற்களுடன் மண்திட்டு சரிந்து வீழ்ந்ததனால் நல்லதண்ணீர் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது போக்குவரத்தினை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை வீதி போக்குவரத்து அதிகார சபை எடுத்துள்ளன. நல்லத்தண்ணி நகரில் இருந்து வருகைதரும் பயணிகள் மற்றும் மஸ்கெலியா நகரில் இருந்து வருகைதரும் பயணிகள் லக்சபான வரை மட்டுப்படுத்த பட்டுள்ளது. ஆகவே உடன் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாதையில் காணப்படும் கற்பாறை மற்றும் மண் திட்டை கனரக இயந்திரங்களின் உதவியுடன் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனார்ந்து தெரிவித்தார்.

தற்போது மத்திய மலை நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. எனவே வளைவுகள் நிறைந்த இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

தகவல் : ஹட்டன் கே.சுந்தரலிங்கம், நீலமேகம் பிரசாந்த் 

 

 216 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!