எனது முதல்வாக்கு வடிவேல் சுரேஷிற்கே ஹரீன் பெர்ணாண்டோ உறுதிமொழி

மும்மொழி ஆற்றலும் அரசியல் ஆளுமையையும் தன்னகத்தே கொண்டு மலையக மக்களின் காவலனாக செயற்படும் வடிவேல் சுரேஷிற்கே எனது முதல் வாக்கு என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியபட்டியல் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

பதுளையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாச பதுளை மாவட்ட வேட்பாளரான வடிவேல் சுரேஷ் மற்றும் கட்சியின் வேட்பாளர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்திலே ஹரின் பெர்ணான்டோ மேற்கண்டவாரு தெரிவித்திருந்தார்.

இதன் போது தொடர்ந்து அவர் பேசுகையில்

மலையக மக்களுக்காக வீதியிலிருந்து பாராளுமன்றம் வரை எதுவித ஐயப்பாடுமின்றி குரல் கொடுக்கும் ஒரே தலைமைத்துவ என்றால் அது வடிவேல் சுரேஷ் மாத்திரமே. பல இடங்களிலும் தருணங்களிலும் நான் பார்த்து வியந்த நல்லதொரு மனிதன் வடிவேல் சுரேஷ். தன் மக்களின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் பல வழிகளிலும் தன்னுடைய ஆளுமையையும் ஆற்றலையும் பிரயோகித்து சேவையாற்றியுள்ள நல் உள்ளம் படைத்த வடிவேல் சுரேஷிற்கே என்னுடைய முதல் வாக்கு.

இதுவரை நடைபெற்று முடிந்த தேர்தல்களிலும் தனிப்பட்ட முறையில் என்னுடைய வாக்கை நான் எனக்காக இட்டதில்லை. மாறாக என்னுடைய முதல் விருப்பு வாக்கை வடிவேல் சுரேஷிற்கே அளித்துள்ளேன்.இம்முறையும் அளிப்பேன், என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் முன்னிலையில் உறுதியாக கூறுகின்றேன்.

ஆகவே. பதுளை மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் தேவையானதும் வளமிக்கதுமான சிறந்த தலைமைத்துவம் வடிவேல் சுரேஷ் மாத்திரமே என்பதை நினைவில் பதித்து தொலைபேசி சின்னம் இலக்கம் 9 இற்கு உங்கள் வாக்குகளை அளித்து பதுளை மாவட்டத்திலே அதிகூடிய வாக்குகளைப் பெற்று பாராளுமன்றிற்கு தெரிவான சிறுபான்மை மக்கள் பிரதிநிதி என்ற அங்ககீகாரத்தை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.என குறிப்பிட்டார்.

 

 

நீலமேகம் பிரசாந்த்

 378 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan