நுவரெலியா மாவட்ட மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தின் முத்தையா பிரபாகரன் ஏற்படுத்துவார்- சனத்ஜயசூரிய தெரிவிப்பு.
நுவரெலியா மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றத்தின் எதிர்வரும் 05ம் திகதி இடம்பெறவிருக்கின்ற பொது தேர்தலின் மூலமாக அதற்கான மாற்றத்தினை முத்தையா பிரபாகரன் ஏற்படுத்துவார் என இலங்கை அணியின் முன்னால் கிரிட்வீரர் சனத்ஜயசூரிய தெரிவித்துள்ளார் 31.07.2020. வெள்ளிகிழமை ஹட்டன் டி.கே. டபூல்யூ கலாச்சார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் இதன் போது மேலும் கருத்து தெரிவித்த சனத்ஜயசூரிய நுவரெலியா மாவட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றிணைந்துசெயல்பட்டால் மாத்திரமே இதனை ஏற்படுத்தமுடியும் முரளியும் பிரபும் செய்த சமுக சேவைகள் தற்பொழுது நுவரெலியா மாவட்டத்திற்கு வந்துள்ளது எமக்கு ஒரு மாற்றம் வேண்டுமென கோறிதான் இன்று நாம் அனைவரும் இங்கு வந்துள்ளோம் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களினால் வாக்காளர்களுக்கு வாக்களிக்க வெறுப்பு ஏற்பட்டுள்ளது ஆகையால்தான் மக்களுக்கு சிறந்தமுறையில் சேவையினை முன்னெடுக்க பிரபு உங்கள் மத்தியில் வந்துள்ளார் இதற்கு முன்பு மக்களிடம் வாக்குருதி வழங்கியவர்கள் எதனையும் செய்து கொடுத்தது இல்லை நாங்கள் அப்படி செய்யமாட்டோம் வழங்கிய வாக்குருதிகளை நாம் நிறைவேற்றும்.
எமக்கு பொய்யான வாக்குருதிகளை வழங்கிவிட்டு செல்லமுடியாது முத்தையா பிரபாகரன் இந்த தேர்தலில் வெற்றிபெற்றாலும் பெறவிட்டாலும் நாம் முன்னெடுக்க விருக்கின்ற அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்போம் நாம் ஹட்டன் பகுதிக்கு வரும்போது நிறைய விடயங்களை அவதானித்தோம் மக்களுக்கு எது கிடைக்கவேண்டுமோ அது முறையாக கிடைக்கவில்லை பிரபுவின்தந்தையாரரின் பூர்வீகம் நுவரெலியா மாவட்டம் அதனால் தான் மக்களுக்கு சேவைசெய்ய இங்கு வந்துள்ளார் எதிர்வரும் பொதுதேர்தலில் பிரபு வெற்றிபெற்றவுடன் பழைய நிலைக்கு கொண்டுசெல்ல நாம் இடமளிக்க மாட்டோம் ஜந்து வருடங்களுக்கு ஒரு முறை அளிக்கப்படும் வாக்குகளுக்கு நாம் பெருமதியான இடத்தை தக்க வைத்துகொள்ள வேண்டும் எதிர்வரும் 05ம்திகதி பொதுதேர்தல் இடம்பெறவிருக்கிறது 06ம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் ஒரு மாற்றத்தினைகானவேண்டடும் என்றார்.
பொகவந்தலாவ நிருபர். எஸ். சதீஸ்
460 total views, 2 views today