மாபெரும் வெற்றியை நோக்கி பயணிக்கின்றோம்- பாரத் அருள்சாமி

பல தடைகள் மற்றும் சவால்களையும் தாண்டி இன்று நாங்கள் மாபெரும் வெற்றியை நோக்கி பயணித்துள்ளோமென கண்டி மாவட்ட வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் கண்டி வாழ் மக்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்க்கு ஆதரவாக இருந்தனர். அந்த பலமும் நம்பிக்கையாலும் இன்று அந்த மக்களையும் தாண்டி எங்களுக்கென பெரும் இளைஞர் படை உருவாகியுள்ளது.
ஆட்சியமைக்கவுள்ள அரசாங்காத்திலேயே எங்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக் கொள்ள முடியுமென் அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஜயாவின் சாணக்கிய முடிவே கண்டி வாழ் மக்கள் எங்களுக்கு ஆதரவு வழங்க முக்கிய காரணமாகியுள்ளது. அதன்படி, அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஜயாவின் வழிகாட்டலில் கண்டி மக்களின் ஆதரவுடன் அவர்களின் பிரதிநிதியாக நான் பாராளுமன்றம் செல்வது உறுதி.

பல தடைகள், சவால்கள் மற்றும் தோல்விகயையும் தாண்டி மக்களின் உரிமைகளை வென்றுக் கொடுத்த இலங்கை தொழிலாளரர் காங்கிரஸ் மீதான நம்பிக்கையும் ஆறுமுகன் தொண்டமான் ஜயாவின் மீதான மரியாதையுமே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ போன்ற பெருந்தலைவர்களும் எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
ஆகவே, பொது மக்களும் தங்களுடைய வாக்குகளை முறையாக பயன்படுத்தி, பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த மாற்றத்தின் மூலம் மக்களின் காணி, வீட்டு பிரச்சினைகள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்போம்.

 

க.கிஷாந்தன்

 406 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan