தேசிய ரீதியான ஒற்றுமையை கட்டியெழுப்ப ஐக்கியதேசியக்கட்சியுடன் இணைந்து செயற்படுவோம்- சண் பிரபா

தேசிய ரீதியான ஒற்றுமையை கட்டியெழுப்ப ஐக்கியதேசியக்கட்சியுடன் இணைந்து செயற்படுவோம்- சண் பிரபா

ஐக்கிய தேசியக்கட்சி இனவாதம் , மதவாத்த்தையும் கொண்டல்லாமல் எப்போதும் சமத்துவத்தை ஏற்படுத்திய தனித்துவமான கட்சி. தமிழ், முஸ்லிம் தலைமைகள் தனித்தனியான கட்சியாக இருந்தாலும் ஒன்றிணைத்து அவர்களை வெற்றிபெறச் செய்வது ஐக்கிய தேசியக்கட்சி. ஆனால், இவ்வாறு துணையாக இருந்த ஐ.தே.க வை கைவிட்டு சஜித் அணியில் சேர்ந்துள்ளார்கள் நமது நன்றி மறந்த தலைவர்கள் என களுத்துறை மாவட்டத்தில் ஐ.தே.க வில் போட்டியிடும் சண்.பிரபா தெரிவித்துள்ளார்.

நேற்று அட்டுளுகமவில் பெருமளவாக ஐ.தே.க ஆதரவாளர்கள் கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஐ.தே.க உடன் இருந்து இவர்கள் நன்றியுணர்வு அல்லாது மக்களுக்கு சரியான சேவைகள் செய்யாது, வெற்றி பெறுவோமா என்ற அச்சத்திலேயே சஜித் அணியில் இணைந்துள்ளனர். ஆனால், இதுவரை காலமும் நன்றி உணர்வுடன் இருந்தவர்கள் ஐ.தே.வுடன் இணைந்திருப்பார்கள்.

தற்போது முஸ்லிம் பள்ளிவாசலுக்கு முன்பு இடம்பெறும் இக்கூட்டத்தில், பாலித தெவரப்பெரும ஒரு பௌத்தராக இருந்தாலும் கூட அவருடன் இத்துணை முஸ்லிம்களும் இணைந்திருப்பதும் முஸ்லிம்கள் மனதில் அவர் இடம்பிடித்திருப்பதும தேசிய ரீதியில் சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கு உந்து சக்தியாக இருக்கின்றது.

முஸ்லிம் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் பாலித்த தெவரப்பெருமவிற்கு இவர்கள் அளிக்கும்பேராதரவு மகிழ்ச்சியைத் தருகிறது. அவருடன் இணைந்து சிறுபாண்மை தமிழ்மக்கள் பிரதிநிதியாகிய என்னையும் இதில் இணைத்து இங்கு மூவினத்தையும் ஒன்றாக இணைத்திருப்பது தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவதாக இருக்கின்றது.

தங்களை வளர்த்துக்கொள்கின்ற இனவாத தமிழ் , முஸ்லிம் தலைமைகளுக்கு அப்பால் சென்று தேசிய ரீதியான ஒற்றுமையை நாம் கட்டியெழுப்புவோம். இதற்கு ஐக்கியதேசியக்கட்சியுடன் இணைந்து செயற்படுவோம்.

 

 

எம்.கிருஸ்ணா

 424 total views,  28 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!