நாளை முதல் மீண்டும் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை…

இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டில் நாளை மறு தினம் நடக்கவுள்ள பொதுத்தேர்தலினை முன்னிட்டு இவ்வாறு அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 4, 5, 6 மற்றும் 7ஆம் திகதிகளில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 27ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் தரம் 11, 12 மற்றும் 13ஆம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும் ஏனைய வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கை ஓகஸ்ட் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது சுகாதார வழிகாட்டுதல்களை அவசியமாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கல்வி அமைச்சகம் அனைத்து அதிகாரிகளுக்கும் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை,கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இராஜாங்கனை மற்றும் வெலிகந்த கல்வி வலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்படாது என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 30,220 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan