யாருக்கு என்ன வழங்க வேண்டும், எந்த பதவியை வழங்க வேண்டுமென்பதை தகுந்த நேரத்தில் இ.தொ.கா அதன் தலைமையும் முடிவெடுக்கும்

யாருக்கு என்ன வழங்க வேண்டும், எந்த பதவியை வழங்க வேண்டுமென்பதை தகுந்த நேரத்தில் இ.தொ.கா அதன் தலைமையும் முடிவெடுக்கும்

யாருக்கு என்ன வழங்க வேண்டும், எந்த பதவியை வழங்க வேண்டுமென்பதை தகுந்த நேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அதன் தலைமையும் முடிவெடுக்கும் மாறாக, தேவையற்றோரின் கருத்துக்களை கேட்க வேண்டிய அவசியம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கில்லையென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் ஜீவா தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் உடபளாத்த சபை உறுப்பினர் கனகரட்னம் தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அளித்த பதிலில் மேலும் தெரிவித்துள்ளதாவது

எந்த நேரத்தில் எவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டுமென்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு தெரியும். மாறாக, தேவையற்றோரின் கருத்துக்களை கேட்க வேண்டிய அவசியம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கில்லை. யாருக்கு என்ன வழங்க வேண்டும், எந்த பதவியை வழங்க வேண்டுமென்பதை தகுந்த நேரத்தில் கட்சியும் அதன் தலைமையும் முடிவெடுக்கும்.
இதேவேளை, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் ஏமாற்றமடைந்த கண்டி வாழ் மக்கள் இந்தத் தேர்தலின் ஊடாக அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர். உங்களைப் போன்றவர்கள் மக்களுக்கு முறையாக சேவை வழங்காதமையினாலேயே கண்டியில் அரசாங்கத்தின் சார்பில் களம் இறக்கப்பட்ட எம் வேட்பாளருக்கு 23 ஆயிரத்திற்கு அதிகமானோர் வாக்களித்துள்ளனர். இது தொடர்ந்து அதிகரிக்குமே தவிர எக்காரணத்தையும் கொண்டு குறையாது.

மக்களுக்காக நிலையான தீர்வை பெற்றுகொடுப்பதற்கு அப்பால் தேவைக்கு ஏற்றவாறு சலுகைகளை வழங்கு அரசியல் செய்யும் கலாசாரம் எங்களிடமில்லை. குறைந்தளவாக தமிழ், முஸ்லிம் மக்களே உங்களுக்கு வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு முறையான சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுங்கள். எங்களுடைய செயல்பாட்டை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். நீங்கள் எல்லாம் வந்து எங்களுக்கு கருத்து சொல்ல வேண்டிய தேவையில்லை.

அத்தோடு, நீங்கள் சொல்லும் கருத்துகளுக்கு பதில் வழங்க வேண்டிய தேவையில்லை. ஆனால் நீங்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்பாக பேசியுள்ளதாலேயே நாங்கள் இந்த அறிக்கையை வெளியிட வேண்டியுள்ளது. இதேவேளை, மதியுகராஜாவின் வாக்குகளே அதிகமெனக் கூறியிருந்தீர்கள். கடந்த பல வருடங்களாக கண்டியில் இ.தொ.கா பெற்றுக கொண்ட வாக்குகளை விட எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் பெற்றுக் கொண்ட வாக்குகள் அதிகமாகும்.

நீங்கள் மக்கள் பக்கம் இருக்கின்றீர்கள் என்றால் உங்களுடைய சொந்த சின்னத்தில் நின்று வெற்றியீட்டிருக்க வேண்டும். தமிழ் மக்கள் உங்களை நிராகரித்துள்ளதாலேயே இம் முறைத் தேர்தலில் முஸ்லிம் மக்களுடைய வாக்குகளை குறிவைத்து பிரசாரம் செய்தீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். உங்களுக்கு வாக்களித்து மக்களுக்கு சேவை செய்ய முற்படுங்கள். மாறாக எங்களுக்கு கருத்து சொல்ல வர வேண்டாமென உடபளாத்த சபை உறுப்பினர் ஜீவா தெரிவித்தார்.

 614 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan