இதொகாவின்  அடுத்த  தலைவர் யார்?  இரும்புக்கரம்  செலுத்தும்  கோதை நாச்சியார்!

இதொகாவின் அடுத்த தலைவர் யார்? இரும்புக்கரம் செலுத்தும் கோதை நாச்சியார்!

மலையகத்தில் நீண்ட அரசியல் வரலாற்றை கொண்ட ஒரு தொழிற்சங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். கடந்த எழுபது வருடங்கள் அந்த சங்கத்தை கோலோச்சிக்கொண்டிருப்பவர்கள் அமரர் தொண்டமான் குடும்பத்தினர், அவர்களின் பரம்பரையை விட்டு அந்த தலைமை வேறு யாருக்கும் கொடுக்கப்படவில்லை.

அமரர் தொண்டமான் அவரது மகன் ராமநாதன் பின்னர் பேரன் ஆறுமுகம் இப்போது பூட்டப்பேரன் ஜீவன் குமாரவேல், அதைவிட அந்த சங்கத்தில் அடுத்த பங்குதாரர் செந்தில் முத்துவிநாயகம்.

ஆனால் இன்று அந்த சங்கத்தை தலைமைத்தாங்குபவர் ஆறுமுகன் அவர்களின் மூத்த மகள் கோதை நாச்சியார் அவர்களே அவரை மீறி அந்த சங்கத்துக்குள் யாரும் முடிவு எடுக்க முடியாது என்பது வெளியுலகுக்கு தெரிவதில்லை. தற்போது அந்த சங்கத்தை முழுவதுமாக தமது குடும்ப கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. மருதுபாண்டி ராமேஸ்வரனிடம் இருந்து நிதி செயலாளர் பதவியை பறித்து அதை தமது குடும்பம் சார்ந்த ஒருவரிடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது அது சிலவேளை செந்திலுக்கு சென்றடைய கூடும்? அல்லது அவர் கட்சியின் தலைவராக்கப்படலாம்? சிலவேளை ராமேசை சமாதானப்படுத்த தலைவர் பதவி வழங்கப்படலாம்?

கட்சியின் பொதுச்செயலாளராக கோதை நாச்சியார் நியமிக்கப்பட்டு இளைஞர் அணி பொறுப்பை தன் வசம் தொடர்ச்சியாக தக்கவைத்துக்கொள்ள அவர்கள் குடும்பத்துக்குள் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்று இருப்பது உள்வீட்டு தகவல்.

தேர்தலின் பின்னர் சங்கத்தில் ஓரங்கட்டப்பட்டிருப்பவர் பிலிப் இவரை ஜீவன் அமைச்சராக பதவியேற்றபோதும் அவரை வரவேண்டாம் என்று சொல்லுமளவுக்கு அவர் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். நீண்டகாலமாக அந்த கட்சிக்கே உழைத்த அவர் மனம் நொந்து போயிருக்கின்றார், தலைவர் பதவி தொடர்பாக பேச்சுக்கள் எழும்போது இதொகாவின் மூத்த உறுப்பினர் சக்திவேல் அந்த பதவிக்கு தானே பொருத்தமானவன் என்றவகையில் தனது விருப்பை தெரிவிக்க கூடும் என்பதில் வேற்று கருத்து இருக்கப்போவதில்லை அவர் தனது ஆதரவாளர்களிடமும் இதை இடைக்கிடை ஞாபகம் ஊட்டி வருவது தெரிந்ததே.

இதேவேளை ஆசிரியரும் முன்னாள் மத்திய மாகாண உறுப்பினரும் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய கணபதி கனகராஜ் கட்சுக்குள் தனக்கு உயர்ந்த பதவியொன்றை எதிர்ப்பார்த்து காத்திருப்பவர், ராமேஸ்வரன் நாடாளுமன்றுக்கு தெரிவாகியிருப்பதால் அவரின் நிதிச்செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என நம்பி இருக்கின்றார் என்ற தகவலும் உண்டு.

தற்போது சங்கத்தில் எவ்வளவு நீண்டகாலமாக இருந்தாலும் கோதை நாச்சியாரின் ஆளுமைக்கு உட்பட்டவர்களாவே இருக்க வேண்டும் ஜீவனும் அவரின் அக்காவுக்கு கீழ்தான் செயலாற்றவேண்டும், ஓமானில் வைத்தியராக வேலை செய்துவிட்டு இப்போது தனது கணவருடன் இருக்கின்றார். அதைவிட அவரின் தங்கை தங்கையின் கணவர் என எல்லோரும் தமது தொழில்களை கைவிட்டு இதொகாவை கொண்டு நடத்தும் திட்டத்தில்தான் இருக்கின்றனர்.

இதொகாவின் முடிவுகள் அது முன்னெடுக்கும் திட்டங்கள் அனைத்தும் இவர்களை மீறி ஒரு துரும்பும் இனி நகரப்போவதில்லை என்றே உள் வீட்டு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மலையகத்திலிருந்து நாரதன்.

 4,188 total views,  8 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan