நான்கு வருடங்களுக்கு பிறகு ஆணழகன் போட்டியில் தமிழ் வீரர்கள் பதக்கங்களை தன்வசப்படுத்தினர்.
மத்திய மாகாண ஆணழகர் போட்டி கண்டி வை.எம்.சி மண்டபத்தில் 20/08/2020 வியாழக்கிழமை இடம்பெற்றது.இப்போட்டியில் மலையகத்திலிருந்து பங்குப்பற்றிய மூன்று தமிழ் வீரர்கள் 4 வருடங்களுக்கு பிறகு பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.
அந்தவகையில் நானுஒயாவை சேர்ந்த சங்கர் கனேஸ் 75 கிலோ எடையில் போட்டி போட்டு முதலாம் இடத்தில் தங்கப்பதக்கத்தையும், கொட்டகலையை சேர்ந்த சசிதரன் இரண்டாம் இடத்தைப்பெற்று வெள்ளி பதக்கத்தையும், நானுஒயாவை சேர்ந்த ச.சசிதரன் முதல் முறையாக பங்கு பற்றி 70 கிலோ எடையில் மூன்றாம் இடத்தில் வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
குறித்த வீரர்கள் உலகசாம்பியன் மாதவன் ராஜ்குமார் மேம்பார்வையில் போட்டியில் பங்குப்பற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த், சந்ரு
1,388 total views, 4 views today