எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு;  நாடாளுமன்றில்  உதயகுமார்  எம் பி !

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு; நாடாளுமன்றில் உதயகுமார் எம் பி !

கௌரவ சபாநாயகர் அவர்களே – எனது கன்னி உரையை இந்த சபையில் ஆற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கிய உங்களுக்கு முதற்கண் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
­­
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் என்னை இந்த உயரிய சபைக்கு அனுப்பி வைத்த நுவரெலியா மாவட்ட வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்தோடு என்னை வழிநடத்திய தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் கௌரவ மனோ கணேசன், பிரதித் தலைவர் கௌரவ இராதாகிருஸ்ணன் அவர்களுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது ஒவ்வொரு முன்னேற்றத்திலும் எனக்கு உந்துசக்தியாக இருக்கும் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே
இலங்கையில் வாழும் ஏனைய மக்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கிய ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக நான் தெரிவுசெய்யப்பட்டுள்ளேன்.
எனவே சமூகத்தின் முன்னேற்றத்தை நோக்கிய குரலாக இந்த பாராளுமன்றில் நான் செயற்படுவேன்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முயற்சியால் மலையக மக்களுக்கு பல முன்னேற்றகரமான அரசியல், அபிவிருத்தி உரிமைகளை பெற்றுக் கொடுத்துள்ளோம். அதனை தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று அரசாங்கம் ஆட்சி அமைத்துள்ளது. நாங்கள் பாராளுமன்றில் எதிர்கட்சி வரிசையில் உள்ளோம். நாங்கள் எதிர்கட்சியே தவிர எதிரி கட்சி அல்ல.

அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து திட்டங்களையும் விமர்சிப்பது எமது நோக்கமல்ல. மக்களுக்கு நன்மை அளிக்கும் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அதேவேளை, பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு எதிர்ப்பு வெளியிடஒருபோதும் தயங்க மாட்டோம்.

கௌரவ சபாநாயகர் அவர்களே
புதிய அரசாங்கம் 19வது திருத்தச் சட்டத்தை நீக்குவதிலும் 20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதிலும் தேர்தல் முறையை மாற்றுவதிலும் அவசரத்தை காட்டுகிறது. ஆனால் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அரசாங்கம் அவசரத்தைக் காட்டினால் நாட்டை விரைவில் முன்னேற்ற முடியும்.

நாட்டிற்கு அதிக வருமானத்தை ஈட்டித்தரும் பெருந்தோட்ட துறை, சுற்றுலாத் துறை மேம்பாடு குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அதற்கான விசேட வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சிறுதோட்ட உரிமையாளர்கள் ஊடாக தேயிலை ஏற்றுமதி அதிகம் செய்யப்படுகிறது. ஆனாலும் பெருந்தோட்ட துறையிலேயே அதிக தொழிலாளர்களும் அவர்களை தங்கி வாழும் குடும்ப உறுப்பினர்களும் உள்ளனர். எனவே பெருந்தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

மலையக மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் இளைஞர் யுவதிகளின் விளையாட்டு, வேலைவாய்ப்பு, சுயதொழில் ஊக்குவிப்பு விடயங்களில் கூடுதல் கரிசனை காட்டப்பட வேண்டும் என்பதை இந்த உயரிய சபையில் கேட்டுக் கொள்கிறேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே
நாட்டிற்கு அந்நியா செலாவாணியை ஈட்டித்தரும் வௌிநாட்டு வேலைவாய்ப்புத்துறையும், பரீட்சைகளை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களின் கல்வித்துறையும் கொரோனா வைரஸ் காரணமாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. அவற்றை சீர்செய்ய உரிய திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும்.

நாட்டில் ஒரு ஆளுமைமிக்க ஜனாதிபதியும் அனுபவமிக்க பிரதமரும் செயற்திறனுடைய எதிர்கட்சித் தலைவரும், சிரேஸ்ட அமைச்சர்களும் இளைய பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ள உயரிய சபையில் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம்.

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க!

 360 total views,  4 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan