அட்டன் ஸ்டெதர்டன் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது- நாளை முதல் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப முடிவு…..

அட்டன் ஸ்டெதர்டன் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது- நாளை முதல் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப முடிவு…..

அட்டன் ஸ்டெதர்டன் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பாக இன்று அட்டன் உதவி தொழில் ஆணையாளர் பணிமனையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஸ்டெதர்டன் தோட்டத் தொழிலாளர்களின் பணி நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.அட்டன் ஸ்டெதர்டன் தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 11ம் திகதி முதல் பணி நிறுத்தப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வந்தனர்.

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் ஏற்பாட்டில் அட்டன் உதவி தொழில் ஆணையாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.
அட்டன் உதவித் தொழில் ஆணையாளர் மடுகல்ல தலைமையில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அட்டன் பெருந்தோட்ட நிறுவனத்தின் பொது முகாமையாளர் வருணபெர்ணான்டோ ,பிரதி பொது முகாமையாளர் உதயனி வணிகதுங்க , தோட்ட முகாமையாளர் கபில , தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிற்சங்க நிர்வாக இயக்குனர் நந்தகுமார், மாநில இயக்குனர் மருத வீரன், மலையகத் தொழிலாளர் முன்னணி தொழிலுறவுஅதிகாரி மாரிமுத்து மற்றும் தோட்டக் கமிட்டி தலைவர் மார்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது பின் வரும் கோரிக்கைகள் பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்கள் சார்பாக முன்வைக்கப்பட்டன.
தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் மலைப்பகுதிகள் முறையாக பராமரிக்க வேண்டும்.

கொழுந்து பறிப்பதற்கு ஏனைய தோட்டங்களிலிருந்து தொழிலாளர்களை வரவழைக்க கூடாது.
கொழுந்து பறிப்பதற்கு இயந்திரங்கள் பயன்படுத்தக் கூடாது.

தற்காலிகத் தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழில் வழங்க வேண்டும்.
கொழுந்து மலைகளை வெளி ஆட்களுக்கு வழங்கக் கூடாது.

தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக தோட்ட நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் மாதம்தோறும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
கூட்டு ஒப்பந்த சரத்துக்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கடந்த மாதம் அரை நாள் சம்பளம் வழங்கியவர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகள் தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பல கோரிக்கைகளுக்கு தோட்ட தொழிலாளர்கள் சார்பாக சுமுகமான தீர்வுகள் எட்டப்பட்டன.

தோட்ட கமிட்டி தலைவர்கள் இந்த தீர்வுகளை ஏற்றுக்கொண்டதால் தொழிலாளர்கள் முன்னெடுத்த பணி நிறுத்தப் போராட்டத்தை இன்று கைவிட்டு நாளை முதல் பணிக்குத் திரும்புவதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

(க.கிஷாந்தன்)

 890 total views,  10 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan