கண்டி ரஜவெல்ல இந்து தேசிய கல்லுரியையை சகல வசதிகள் கொண்ட விஞ்ஞான கல்லூரியாக தரம் உயர்த்த நடவடிக்கை

கண்டி ரஜவெல்ல இந்து தேசிய கல்லுரியையை சகல வசதிகள் கொண்ட விஞ்ஞான கல்லூரியாக தரம் உயர்த்த நடவடிக்கை

கண்டி மாவட்டம் மற்றும் மலையகம் முழுவதும் கல்வித்துறையில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க உள்ள நிலையில் கண்டி ரஜவெல்ல இந்து தேசிய கல்லுரியையை சகல வசதிகள் கொண்ட விஞ்ஞான கல்லுரியாக தரம் உயர்த்துவதற்கான முன்னனெடுப்புகள் தொடர்பாக அக்கல்லூரிக்கு விஜயம் ஒன்றை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் சர்வதேச உறவுகள் மற்றும் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பாளருமான சட்டத்தரணி பாரத் அருள்சாமி இன்று மேற்றக்கொண்டிருந்தார்.

அதனடிப்படையில் கல்லூரியின் அதிபர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி அதற்கான திட்டங்களை வகுத்ததோடு எதிர்வரும் வாரத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஊடாக கல்வி அமைச்சின் மூலமாக திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பாரத் அருள்சாமி ‘மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் இக் கல்லூரிக்கு மிக பெறுமதியான கட்டிட வசதிகளை வழங்கினார் அதோடு என்னுடைய தந்தை அமரர் அருள்சாமி அவர்களும் கல்வி துறையை மேம்படுத்துவதற்காக பல வேலை திட்டங்களை முன்னெடுத்தார் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது எனக்கு கல்விசார் சமூகம் தங்களுடைய பூரண ஆதரவை வழங்கினார்கள் என்னுடைய நிலைபேண்தகு அபிவிருத்தி கொள்கைக்கும் அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி அவர்களின் செயல்திட்டத்திலும் பாரிய நம்பிக்கை வைத்தார்கள்.

அதனடிப்படையில் எனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களது கவனத்திற்கும் ரஜவெல இந்து தேசிய கல்லூரியை சகல வசதிகள் கொண்ட விஞ்ஞான கல்லுரியாக தரம் உயர்த்துவதுற்கான யோசனை முன்வைக்கபட்டது அதனடிப்படையில் கல்வி அமைச்சின் ஊடாக நாம் நிச்சயம் இதனை தரம் உயர்த்துவோம்.

மேலும் கண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளிலும் மாணவர்களின் கல்வி தரம் மற்றும் தேவையான வசதிகளை வழங்கவும் வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்க உள்ளோம் என்று பாரத் அருள்சாமி மேலும் தெரிவித்தார்.

 

(க.கிஷாந்தன்)ss

 384 total views,  4 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan