எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வடிவேல் சுரேஷ் இரங்கல். நவரசங்களையும் பாட்டில் கொடுத்தவர் பாலா

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வடிவேல் சுரேஷ் இரங்கல். நவரசங்களையும் பாட்டில் கொடுத்தவர் பாலா

இசையென்ற இன்ப ஒலியலைகளை தன் காந்தக் குரலால் நம் செவிகளுக்கு விருந்தாக்கிய இசையின் பிதாமகன் SPB க்கு ஆழ்ந்த இரங்கல்கள்..என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தனது இரங்கல் செய்தியை பிரபல தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் இரங்கல் செய்தியில்

பாடகர்,இசையமைப்பாளர்,நடிகர்,இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட இசைச் சக்கரவர்த்தியை இழந்து தவிக்கின்றனர் ஒட்டு மொத்த உலக இரசிகப் பெரு மக்கள்.தன் காந்தர்வக் குரலால் 45,000 மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்து,6 தேசியவிருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷன் என பல தரப்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். அது மட்டுமல்லாது எந்தவொரு விருது வழங்கல் விழாவாயினும் அவ் விழாவின் மேடைகளையும் விருதுகளையும் தன் வசப்படுத்திக் கொண்ட இசைக் கலைஞன் SPB என்றால் மிகையாகாது.

மொழிகளைக் கடந்து பன்முகப்படுத்தப்பட்ட தன் உன்னதப்படைப்புக்களை இரசிகர்களுக்கு வழங்கி இசைத்துறையில் மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவரின் படைப்புக்களை வெறுமனே பாடல் என்று கடந்து போக முடியாதவையாகும் காரணம் அவை ஒவ்வொன்றும் மனித வாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ள உணர்வுகள் என்றே கூற வேண்டும்.

ஆன்மீகம், காதல், சோகம், தாய்மை, என எண்ணிலடங்கா வகையில் தன் இரசிகர்களுக்கு விருந்தளித்த பாடு நிலாவின் தேகம் மறைந்தாலும் இசையாய் என்றுமே எம் நெஞ்சங்களில் மலர்ந்திருப்பார்.

மேலும் அன்னாரின் ஆத்ம சாந்தியடையஇறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின்
குடும்பத்தாருக்கும்,ரசிகர்களுக்கும்,நண்பர்களுக்கும்,உறவினர்களுக்கும் இலங்கை வாழ் மக்கள் சார்பாகவும் மலைய வாழ் அனைத்து சொந்தங்கள் சார்பிலும் ஆழ்ந்த இதய அஞ்சலிகளை தெரிவிக்கின்றேன்.

 நீலமேகம் பிரசாந்த்

 434 total views,  6 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan