பிரதான ஊடகங்கள் மனோ கணேசனுக்கு  கதவடைப்பு  செய்வது  ஊடக தர்மம் அல்ல!

பிரதான ஊடகங்கள் மனோ கணேசனுக்கு கதவடைப்பு செய்வது ஊடக தர்மம் அல்ல!

கொழும்பில் இயங்கும் இரண்டு தமிழ்ப்பத்திரிககைகள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அவர்களின் செய்திகளை பிரசுரிக்க அந்த ஊடகங்களின் தலைமை முட்டுக்கட்டை விதித்திருப்பதாக தகவல்கள் கிட்டியுள்ளன. (GOPIO) என்ற உலக இந்திய வம்சாவழி அமைப்போடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த இந்த ஊடகங்களின் தலைமை இந்த முடிவை எடுத்திருப்பதாக உள் வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மற்றும் கிழக்குக்கு அப்பால் ஆறு நாடாளுமன்ற பிரதிநிதிகளை தன்னகத்தே கொண்ட ஒரு தனிப்பெரும் கட்சியாக தமிழ் முற்போக்கு கூட்டணி விளங்குகின்றது சுமார் மூன்றரை லட்சம் மக்களின் வாக்கு பலத்தில் நாடாளுமன்றுக்குள் ஒரு சக்தியாக அது திகழ்கின்றது.

ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் மனோ அவர்களின் செய்திகளுக்கு கதவடைப்பு செய்வதால் அந்த ஊடகங்களுக்கு கிடைக்கப்போகும் லாபம் என்ன? நீண்டகாலமாக நடுநிலை என தங்களை காட்டிக்கொண்டு இருந்த இந்த ஊடகங்கள் ஜனநாயக உரிமை பற்றி எழுதுவதற்கு தகுதி இருக்கின்றதா? என்று சிந்திக்க வைத்துள்ளது. ஊடக தர்மம் என்ன என்பது பற்றிய கேள்விகளை எம் முன்வைத்துள்ளது. தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது ஊடகமாக கருத முடியாது.

மனோ அவர்களின் செய்திகளை கதவடைப்பு செய்வது தொடர்பில் விவாதங்கள் ஏற்படுமாயின் அந்த ஊடகங்களின் நம்பகத்தன்மைக்கு குந்தகம் விளையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அச்சு ஊடகங்கள் பெயருக்காக ஓடிக்கொண்டு இருக்கின்றதே ஒழிய அது பெரும்பாலான மக்களிடம் சென்று சேர்வதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இன்று இணையவழி செய்திகளையே பெரும்பாலானோர் பார்க்கின்றனர். காரணம் சுடச்சுட செய்திகளை அங்குதான் பார்க்க முடிகின்றது.

அடுத்தநாள் வரும் செய்திகளை பார்க்கும் வாசகர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என்பது இந்த அச்சு ஊடகங்களுக்கு தெரிந்த ஒன்றுதான் எனினும் கௌரவம் காரணமாக அடக்கி வாசிக்கின்றனர்.

மனோ கணேசன் அவர்களை இலக்காக வைத்து அவரின் செய்திகளை கதவடைப்பு செய்வது என்பது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியை மட்டுமல்ல அந்த மக்களையும் புறக்கணிப்பதாகவே அமையும். ஊடக தர்மம் என்பதை அதர்மம் ஆக்கும் செயல்களால் ஏற்கனவே உள்ள நடுநிலை என்ற விடயம் ஒரே நாளில் தவிடுபொடியாகும் என்பதை சம்பந்தப்பட்ட ஊடக மேலாளர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஊடகம் என்பது தனிநபர்களின் விருப்பு வெறுப்புக்கான ஒன்றல்ல ஜனநாயகம் மீறி தனி நபர்களின் அராஜக செயல்களுக்கு அது உட்பட்டால் அத்தோடு அது மக்கள் மத்தியில் இருந்து தூக்கி எறியப்படும். வீரகேசரியோ அன்றி தினக்குரலோ வடக்கு கிழக்கைவிட மலையக பகுதிகளை நம்பியே அதை நடத்த வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இரண்டு பத்திரிகைகளும் ஒரே முதலாளிக்கு சொந்தமானது என்பது பலருக்கு தெரிவதில்லை.

எனவே ஊடக தர்மம் மீறி செயற்படுவதை விடுத்து தார்மீக தர்மம் கருதி ஜனநாயக உரிமைகளுக்கு முன்நிலை வழங்குகள் நீங்கள் கதவடைப்பு செய்திருப்பது மலையகத்தில் மக்கள் செல்வாக்குப்பெற்ற ஒரு கட்சியின் தலைவரை என்பதை கருத்தில் கொள்ளுங்கள் என்பதை இங்கு வலியுறுத்தி தெரிவிக்கின்றேன்.

கோவிந்தன்.

 1,174 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )

yozgat escort kars escort tokat escort osmaniye escort bayburt escort afyon escort kahramanmaraş escort çorum escort fethiye escort kastamonu escort balıkesir escort erzurum escort sivas escort düzce escort ordu escort manavgat escort burdur escort adıyaman escort aydın escort giresun escort mardin escort kutahya escort şanlıurfa escort yalova escort van escort kırklareli escort bilecik escort karaman escort muğla escort zonguldak escort
error: Content is protected !!
brazzers tecavüz porno turbanlı porno