
மேலும் 5 பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்.
குளியாப்பிட்டிய, பன்னல, தும்மலசூரிய, கிரியுல்ல மற்றும் நாரம்மல பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் உயர்தர மாணவர்கள் பரீட்சைக்கு சென்று வீடு திரும்ப தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தடையாக இருக்காது என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
282 total views, 2 views today