
தொ.தே.சங்கத்தின் பிரதி பொதுச் செயலாளராக கல்யாணகுமார் தெரிவு – தொ.தே.சங்கத்தின் உயர் பீடத்தில் முடிவு
தொழிலாளர் தேசிய சங்கத்தின் உத்தியோகஸ்தர் சபை கூட்டமும் நிர்வாகசபை கூட்டமும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் தலைமையில் ஹற்றனில் இடம்பெற்றது.
இதன்போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி பொதுச்செயலாளராக தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவிச் செயலாளரும் நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினருமான பழனிவேல் கல்யாணகுமார் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.
அதேவேளை தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர் பீடத்துக்கு மத்திய மாகாணசபையின் முன்னாள் அமைச்சரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் உப தலைவருமான முத்தையா ராம்,
தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணித் தலைவரும் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமான பாலகிருஷ்ணன் சிவநேசன் ஆகியோர் உள்வாங்கப்பட்டனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப் , பிரதி நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்தக் கூட்டங்களில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளர் எஸ். செபஸ்டியன், நிர்வாகச் செயலாளர் எஸ் .வீரப்பன், உப தலைவர்களான இரத்தினசாமி, மாணிக்கம் ,எஸ் .ராஜமாணிக்கம் வேலு சிவானந்தன்,ஏ. இராஜமாணிக்கம் , உதவிச் செயலாளர்களான வைலட்மேரி,ஆர்.சிவகுமார், பிராந்திய தேசிய அமைப்பாளர்களான ஆர். விஜய வீரன்,கே. கல்யாணகுமார், ஏ. பிரசாந்த், எம். மனோகரன்,, தொழிற்சங்க இயக்குனர், அ. நந்தகுமார் ஆகியோரும் மாவட்ட தலைவர்களும் ஏனைய முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
அதேவேளை புதிய வருடத்திற்கான தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக் கமிட்டி விபரங்கள் அடங்கிய கோவை தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமாரிடம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ் .பிலிப் ஒப்படைத்தார்.
492 total views, 2 views today