
கொத்மலை பிரதேச சபையின் 2021க்கான வரவுசெலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது….
கொத்மலை பிரதேச சபையின் 2021க்கான வரவுசெலவு திட்டம் நிறைவேற்றுவதற்கான அமர்வு சபை தலைவர் சுசந்த ஜயசுந்தர தலைமையில் 24/11/2020 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
53 உறுப்பினர்களை கொண்ட பிரதேச சபையில் 46 உறுப்பினர்களே சமூகமளித்திருந்தனர் இதில் 33 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 3 உறுப்பினர்கள் எதிராகவும் 10 உறுப்பினர்கள் வாக்களிப்பில் ஈடுபடாமலும் இருந்தனர்.இருப்பினும் 33 உறுப்பினர்களின் ஆதரவோடு கொத்மலை பிரதேச சபையின் 2021க்கான வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.
நீலமேகம் பிரசாந்த்
294 total views, 2 views today