
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2021க்கான வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது….
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2021க்கான வரவுசெலவு திட்டம் இன்றைய தினம் தவிசாளர் கதிர்ச்செல்வன் தலைமையில் நிறைவேற்றப்பட்டது.
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கான 2021க்கான வரவுசெலவு திட்ட அமர்வு சபைத்தலைவர் கதிர்ச்செல்வன் தலைமையில் 25/11/2020 இடம்பெற்றது.பதினைந்து உறுப்பினர்களை உள்ளடக்கிய இச்சபையில் பன்னிரெண்டு உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துக்கொண்டனர்.அவ்வாறு கலந்து கொண்டவர்களில் ஒருவர் எதிர்பினை வெளிப்படுத்த ஏனைய பதினோரு உறுப்பினர்களின் ஆதரவோடு அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2021க்கான வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.
நீலமேகம் பிரசாந்த்.
470 total views, 2 views today