
பல்கலைக்கழக நினைவு தூபி இடிப்புக்கும் இராணுவத்துக்கும் தொடர்பில்லை – இராணுவ தளபதி தெரிவிப்பு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும், தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும்,
“நினைவுத் தூபி இடிக்கப்பட்டமையானது, பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானம் என கூறிய அவர், அந்த விடயத்திற்கும் தமக்கும் அறவே தொடர்பு கிடையாது எனவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் இவ்விடயத்தில் தலையீட போவதில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் பல்கலைக்கழகத்திற்குள் அமைதியின்மை ஏற்பட்டு, அதனை பொலிஸாரினால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாத பட்சத்தில் மாத்திரமே, தம்மால் அந்த விவகாரத்தில் தலையீட முடியும்” என்றும் குறிப்பிட்டார்
602 total views, 8 views today