
ஹய்பொரஸ்ட்டில் இடம்பெற்ற விபத்தில் 22வயது இளைஞன் ஸ்தலத்திலே பலி
இன்று மதியம் 01 மணியளவில் ஹய்பொரஸ்ட் இலக்கம் மூன்றில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில்
ஸ்தலத்திலேயே இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 22வயது இளைஞரே பலியாகியுள்ளதாகவும் மேலதிக விசாரணை பொலிஸார் தொடர்கின்றனர் எனவும் தெரியவருகின்றது.
5,086 total views, 12 views today