
நுவரெலியா மாவட்டத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பொது செயலக கூட்டம்.
நுவரெலியா மாவட்டத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி கூட்டம் இன்றைய தினம் 13/01 /நுவரெலியா பிரதேச செயலகத்தில் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் பி.புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது.
இதன்போது நுவரெலிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களின் பாதை, சுகாதாரம், நீர்பாசனம், மக்களின் குடியிருப்புகள் போன்ற பல்வேறு உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு நுவரெலியா மாவட்டங்களின் மக்கள் குடியிருப்பு, பாடசாலைகளின் வீதி அபிவிருத்திகள் தொடர்பான கோரிக்கைககள் நுவரெலியா மாவட்ட செயலாளர் புஸ்பகுமார அவர்களினால் முன்வைக்கப்பட்டது
இக் குழு கூட்டத்தில் அமைச்சர்களான சமல் ராஜபக்ச, ஜோன்சன் பெடான்டோ இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ராமேஸ்வரன், நுவரெலியா பிரதேச செயலகத்தின் செயலாளர் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்துக்கொண்டனர்.
டி சந்ரு
424 total views, 2 views today