ஊடகச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கிறாரா ஹட்டன் நகரசபை தலைவர்?  – சிரேஸ்ட ஊடகவியலாளர் மீது ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு.

ஊடகச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கிறாரா ஹட்டன் நகரசபை தலைவர்? – சிரேஸ்ட ஊடகவியலாளர் மீது ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு.

ஹட்டன் – டிக்கோயா நகரசபை தலைவர் பாலசந்திரன் கடந்த மாதம் 23ஆம் திகதிமுதல் தனிமைப்படுத்தட்டிருந்தமை குறித்து சிரேஸ்ட ஊடகவியலாளர் கே.சுந்தரலிங்கம் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அந்த செய்தி அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் வெளியிடப்பட்டதாக அவர் மீது போலி முறைப்பாடு ஒன்றை ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்துள்ளார்.

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவர் கதிர்செல்வனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவருடன் தொடர்பை பேணியிருந்தவர்கள் மற்றும் அவர் பங்குபற்றிய நிகழ்வுகளில் பங்குபற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். கதிர்செல்வன் பங்குபற்றிய நிகழ்வொன்றில் கலந்துகொண்டமையின் காரணமாக ஹட்டன் – டிக்கோயா நகரசபை தலைவர் பாலசந்திரன் கடந்த மாதம் 23ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். குறித்த நிழக்வுக்கு செய்தி சேகரிப்புக்குச் சென்ற சிரேஸ்ட ஊடகவியலாளர் கே.சுந்தரலிங்கம் இந்த விடயம் தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சிரேஸ்ட ஊடகவியலாளர் கே.சுந்தரலிங்கம் வெளியிட்டிருந்த செய்தியானது அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் வெளியிடப்பட்டதாக பாலசந்திரன் ஹட்டன் பொலிஸில் இன்று போலி முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார். நாட்டில் நடப்பவற்றை செய்திகளாக வெளியிடுவது ஊடகவியலாளர்களின் பணியாகும். அமைச்சர்கள் முதல் அடிமட்ட மக்கள் வரை பலருக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். மலையகத்திலும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் மலையத்தில் உள்ள அமைச்சர்கள் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை தனிமைப்படுத்தப்பட்ட செய்திகள் முதல் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியாகின. பல முக்கிய பிரபல்யங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்த விடயங்கள் தொடர்பிலும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

ஆகவே மக்களின் தலைவர்களாக உள்ளவர்களின் தனிப்படுத்தப்பட்ட செய்திகளையும் ஏனைய செய்திகளையும் வெளியிடுவதற்கான உரிமை ஊடகச் சுதந்திரமாகும். அதற்கு விருப்பம் இல்லாதவர்கள் மக்கள் வாக்குகளால் அரசியல்வாதிகளாக முற்படக்கூடாது.

மக்கள் தலைவர்களின் செய்திகளை வாக்களித்த மக்களுக்கு கூறுவது ஊடகவியலாளர்களின் பணியாகும். இதில் எவரும் தலையீடு செய்வது ஊடகச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பதாகும். எவருடைய போலி செய்திகளை வெளியிடும் தேவையும் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செய்திகளை வெளியிடும் தேவையும் ஊடகவியலாளர்களுக்கு இல்லை.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் கே.சுந்தரலிங்கம் எந்தவொரு அரசியல்வாதிக்கும் அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழும் இது வரை நான் செய்திகளை வெளியிட்டதில்லை. இது என் மலையக சமூகத்திற்குத் தெரியும். இரண்டு தசாப்தங்களாக நான் மலையக மக்களின் அன்றாட பிரச்சினைகள் மற்றும் அவர்களது பொருளாதார சமூக கலாசார பிரச்சினைகளை எழுதி வருகிறேன்.

எவர் அச்சுறுத்தல் விடுத்தாலும் மலையக மக்களுக்கான எனது தேடலை தடுக்க முடியாது. எவருக்கும் அடிப்பணியும் தேவையும் எனக்கில்லை. செய்திகளை எப்போதும் ஆராய்ந்து உண்மையான நம்பகமான செய்திகளை மாத்திரமே நான் இதுவரை வெளியிட்டுள்ளேன். என்மீது எவரும் சேறு பூச முற்பட்டால் அது அவர்கள் மீதே வந்து விழும்.

ஊடகச் சுந்திரத்திற்கு எதிராக எவரும் அச்சுறுத்தல் விடுத்தால் அது அவர்களின் அரசியல் எதிர்காலத்திற்கு கேள்விக்குறியாகிவிடும். மக்கள் இந்த விடயங்களை அவதானித்து வருகின்றனர் என்றார்.

 

 1,426 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )

bodrum escort bodrum escort bayan akyarlar escort bitez escort gumbet escort turgutreis escort türkbükü escort mature porno amatör porno yozgat escort kars escort tokat escort osmaniye escort bayburt escort afyon escort kahramanmaraş escort çorum escort fethiye escort kastamonu escort balıkesir escort erzurum escort sivas escort düzce escort ordu escort manavgat escort burdur escort adıyaman escort aydın escort giresun escort mardin escort kutahya escort şanlıurfa escort yalova escort van escort kırklareli escort bilecik escort karaman escort muğla escort zonguldak escort
error: Content is protected !!
brazzers tecavüz porno turbanlı porno