
நோர்வூட் பொகவந்தலாவை பிரதான பாதை 1250 மில்லியன் ரூபா செலவில் காபட் இடும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் மலையகத்தில் பல அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொகவந்தலா ஹட்டன் பிரதான வீதியின் நோர்வூட் தொடக்கம் கெம்பியன் வரையிலான காபட் இடும் பணிகள் நேற்று (19) மாலை ஆரம்பிக்கப்பட்டன.
ஆண்டாண்டு காலமாக பொகவந்தலா ஹட்டன் ஊடான பிரதான பாதை குன்றும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டன. இதனால் பொது மக்கள் மற்றும் சாரதிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். குறித்த வீதி சீரின்மை காரணமாக இவ்வீதியில் பல்வேறு விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. அத்தோடு அடிக்கடி வாகனங்களும் பழுது பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதனால் இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு அதிக நேரம் செலவிட வேண்டிய நிலை ஏற்படுவதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் அரச பணியாளர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டன. இதனால் இவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்தன.
இந்திய அரசாங்த்தின் நிதியுதியில் நிர்மானிக்கப்பட்ட வைத்தியசாலை கட்டடத்தினை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டிக்கோயா கிளங்கன் வருகை தந்த போது குறித்த வீதியின் ஒரு பகுதி நோர்வூட்டிலிருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை வரை மாத்திரம் புனரமைக்கப்பட்டன. ஏனைய பகுதி கடந்த காலங்களில் நோர்வூட் பகுதி வரை மாத்திரம் காபட் இடப்பட்டன.
எனினும் நோர்வூட் முதல் பொகவந்தலாவை வரையான பகுதி மிகவும் மோசமான நிலையிலேயே காணப்பட்டன. இப்பாதையில் வழி விடும் போது எத்தனையோ வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. மழை காலங்களில் இவ்வீதியில் பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே வாகனங்கள் பயணஞ் செய்தன.
நல்லாட்சி அரசாங்கத்தினால் இவ்வீதியினை புனரமைப்பதற்காக பல தடைவைகள் அடிக்கல் நாட்டப்பட்ட போதிலும் அவர்களால் குறித்த வீதியினை புனரமைக்க முடியாமல் போயின. இந்நிலையில் ஜனாதிபதி கோட்டபாய அவர்கள் பதவியேற்ற பின் நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி அவர்கள் முன்வைத்த வேண்டுக்கோளுக்கமைய ஒரு லட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மூன்று கட்டமாக கெம்பியனுக்கு அருகாமை வரை புனரமைக்கு முன்னாள் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆரம்பித்து வைத்தார்.
கடந்த 2020.05.06 திகதி புனரமக்க ஆரம்பிக்கப்பட்ட குறித்த வீதி சுமார் 272 நாட்களில் நிறைவு செய்யப்படவுள்ளன. 6.5 மீற்றர் அகலப்படுத்தி 21 கிலோமீற்றர் தூரம் காபட்யிடப்படும் குறித்த வீதிக்கு அரசாங்கம் 1250 மில்லியன் ரூபா செலவு செய்யப்படவுள்ளன.
இது குறித்த நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி கருத்து தெரிவிக்கையில்..
மறைந்த தலைவர் தலைவர் ஆறுதொண்டமான் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களினால் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் நோர்வூட் முதல் பெட்ரசோ வரை சுமார் 21 கிலோமீற்றர் காபட் இட்டு புனரமைக்கப்படவுள்ளன. சுமார் 200 வருடகாலமாக இந்த பாதை குன்றும் குழியுமாகவே காணப்பட்டது. கடந்த காலங்களில் அடிக்கல் நட்டப்பட்டது பெயர்ப்பலகைகள் திறந்து வைக்கப்பட்டன ஆனால் வேலைகள் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைதிட்டமானது ஒரு லட்சம் கிலோமீற்றர் காப்ட் பாதைகள் என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைபெற்றது வருகிறது. இது இன்று ஆரம்பிக்கப்பட்டு இடை இடையே வேலைகள் நடைபெற்ற வருகின்றன. அது நிறைவு பெற்ற பின் நகரத்தில் கார்தரிப்பிடம் பொது வசதிகள் போன்றன அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் இதன் போது தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்
2,592 total views, 2 views today