
கந்தப்பளை நகரை நவீன நகரமாக மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்….
நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பொரலந்தை தொடக்கம் கந்தப்பளை நகரம் வரையிலான பிரதான பாதையை அகலப்படுத்தி கந்தப்பளை நகரை நவீன முறையில் மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (20) தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வேண்டுகோளுக்கினங்க நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் மற்றும் நுவரெலியா பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் இன்று மேற்பார்வை செய்தனர்.
நீலமேகம் பிரசாந்த்
392 total views, 2 views today