
சிவனொளிபாதமலைக்கு புனித யாத்திரைக்கு சென்ற ஆறுபேருக்கு கொரோனா
சிவனொளிபாதமலைக்கு புனித யாத்திரை சென்ற காலி கல்லூரி ரக்பி அணியின் நான்கு வீரர்களுக்கும் வீரர் ஒருவரின் தாயுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக காலி மாவட்ட தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் வேணுரா கே.சிங்கராச்சி தெரிவித்துள்ளார்.
12 ரக்பி வீரர்களும் அவர்களது பெற்றோரும் கடந்த ஜனவரி 17 ஆம் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்றுள்ளனர். வீரர்களில் இருவர் ஹிக்கடுவ பகுதியை சேர்ந்தவர்கள், மற்றவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் சிங்கராச்சி தெரிவித்துள்ளார்.
1,408 total views, 2 views today