
கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி திட்டம்
கிராமத்துடன் கலந்துரையாடல், செயற்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு என்ற வேலைத்திட்டத்தின் கீழ் பொது மக்களை ஒன்றினைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சித்திட்டம் நேற்று (24/1) 475T இல்டன்ஹோல் கிராம சேவகர் பிரிவில் நடைப்பெற்றது.
பொது மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு மிக அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற விடயங்களை குறிப்பிட்டு கலந்துரையாடுவதன் மூலமாக பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியும். இந்த கலந்துரையாடலில் மிக அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு எதிர்காலத்தில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளது.
இதன் போது அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் எஸ்.கதிர்செல்வன் மற்றும் சபையின் உறுப்பினர் சிவானந்தன்,கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், நுவரெலியா மாவட்ட செயலாளரின் அதிகாரிகள்,பொது மக்கள் என பலரும் கலந்துக்கொண்டார்கள்.
பா.பாலேந்திரன்.
326 total views, 2 views today