
ரதல்ல குறுக்கு வீதியில் பஸ் விபத்து – 13பேர் காயம்….!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியில் ஈஸ்டல் தோட்டத்துக்கு அருகாமையில் பிபிளை பகுதியில் இருந்து மரண வீடொன்றிற்கு தலவாக்கலை நோக்கி பயணித்த பஸ்சொன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த பவுசர் ஒன்றுடன் மோதி பாதையில் தடம் புரண்டு 13 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரனைகளை நானுஓயா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
டி சந்ரு, க.கிஷாந்தன், கே.சுந்தரலிங்கம், நீலமேகம் பிரசாந்த்
808 total views, 4 views today