
கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற தீர்மானம் – ஆகக்குறைந்த வேதனம்…..?
கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி, வேதன நிர்ணய சபையின் கீழ் செயற்பட அனைத்து நிறுவனங்களும் தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதி ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்தபோது
கூட்டு ஒப்பந்தம் அவசியமில்லை. வேதன நிர்ணய சபையை கோருவதாக அவர்களே கூறினர். எனவே, கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி, வேதன நிர்ணய சபையின் கீழ் செயற்பட அனைத்து நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன.
அது நல்லதுதானே என ரொஸான் ராஜதுறை குறிப்பிட்டுள்ளார். தாங்கிக்கொள்ள முடியாதமை காரணமாகவே, தற்போது ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், இரண்டாவது மாதம் தோட்டங்களை மூடவேண்டிய நிலை ஏற்படும். இதன் போது மில்லியன் கணக்கான பணம் வீணாகும். எனவே, பொறுப்பு வாய்ந்த முகாமைத்துவத்தினர் என்ற அடிப்படையில், செய்யக்கூடிய விடயங்களுக்கே தங்களுக்கு இணங்க முடியும்.
725 ரூபா, 75 ரூபா என்றவாறு தீர்வுகள் முன்வைக்கப்பட்டன. எனினும், இவை அனைத்தும் அவசியமில்லை என்றும், தங்களுக்கு வெறுமனே 1,000 ரூபா வேண்டும் என்றும் எவ்வித அடிப்படையும் இன்றி தொழிற்சங்கங்கள் கூறின. தற்போது இந்தப் பிரச்சினை தங்களின் கரங்களை மீறி வேதன நிர்ணய சபைக்கு சென்றுள்ளது.
அதன் தீர்மானத்திற்கு அமைய செயற்பட வேண்டும். வேதன நிர்ணய சபை தீரமானம் மேற்கொண்டு, வர்த்தமானியில் அறிவித்தால், அதுவே ஆகக்குறைந்த வேதனமாகும் என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதி ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.
2,026 total views, 8 views today