ஊடகவியலாளர்களின் எழுத்துரிமையை கட்டிப்போட்டு வைத்திருக்கும்; ஊடக முதலாளிகள்!

0
143

“என்னுடன் காரில் வருவதற்கு பலர் விரும்புகிறார்கள்.கார் பழுதடைந்துவிட்டால் என்னுடன் சேர்ந்து பஸ்ஸில வரக்கூடியவர்களே எனக்குத்தேவை” இது அமெரிக்க ஊடகவியலாளரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளருமான ஓப்ரா வின்பிரே கூறியது.

இதனை மூத்த ஊடகவியலாளரான வீரகத்தி தனபாலசிங்கம் அவர்கள் தனது முகநூலில் அன்மையில் பதிவு செய்திருந்தார்.

அமெரிக்காவின் முன்னணி ஊடகவியலாளரான ஓப்ரா அம்மையாரின் வருடாந்த வருமானம் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் நமது ஊடகவியலாளர்களின் நிலை வேறு பலருக்கு இது தெரிவதில்லை. இதனால் ஊடகவியலாளர்களை விலைக்கொடுத்து வாங்க பலர் முயற்சிக்கிறார்கள்

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தரவுகளின் பிரகாரம் வளர்ந்த நாடுகளில் பணிப்புரியும் அச்சு துறை சார்ந்த ஊடகவியலாளர்களின் வருடாந்த வருமானம் சாரசரியாக சுமார் $ 42,000 டாலர்களும் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களில் பணிப்புரியும் ஊடகவியலாளர்களின் சராசரி வருமானம் $ 50000 டாலர்கள் இதனை சர்வதேச புள்ளிவிபரவியல் நிறுவனமொன்று வெளியிட்டு இருந்தது.

ஆனால் இந்த சம்பளம் வளர்ந்த நாடுகளில் ஏனைய துறைகளுடன் ஒப்பிடும் போது குறைவானது. ஆனால் செல்வாக்கு மிக்க ஊடகவியலாளர்களின் வருமானம் பல மில்லியன்களை கடக்கும் அப்படிப்பட்ட ஊடகவியலாளரே அம்மணி ஓப்ரா அவர்கள்.

ஆனால் இலங்கை , இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் பணிப்புரியும் ஊடகவியலாளர்களின் நிலை குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்.குறிப்பாக அச்சு ஊடகங்களில் பணிப்புரியும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் மாதந்த சம்பளத்தை கொண்டு நான்கு பேர் கொண்ட குடும்பத்தை நடத்துவதே கடினம்.

இதனால் அவர்கள் பொருளாதார நெருக்கடிகளை தொடர்ந்தும் அனுபவித்து வருவது வேதனையான விடயம். சில ஊடகவியலாளர்களின் குடும்ப நிலையை பார்க்கும் போது வேதனையாக இருக்கும்.

மக்களின் அடிப்படை வசதிகளுக்காக போராடும் இவர்களின் நிலை குறித்து சிந்தித்து பார்க்க யாரும் முன் வருவதில்லை

ஆனால் இந்த துறையில் காலடி எடுத்து வைத்தவன் வேறு துறைக்கு செல்வது கடினமான விடயம்.

ஏனைய துறைகளில் பணிப்புரியும் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பதற்காக குரல் கொடுக்கும் சாரசரி ஊடகவியலாளர்களின் சம்பள அதிகரிப்பதற்காக யாரும் குரல் எழுப்புவதில்லை.

90 களில் தனியார் துறையினர் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் தமது முதலீடுகளை மேற்கொள்ள ஆரம்பித்தன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்வி அதிகரித்தது. இதன் காரணமாக ஊடகவியலாளர்களின் சம்பளமும் பன்மடங்காக அதிகரித்தது.

சில நிறுவனங்கள் தமது ஊழியர்களை மகிழ்விக்கும் நோக்கில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்களை கவர்ச்சியாக வழங்கியது

குறிப்பாக ஊடகவியலாளர்கள் எதிர்ப்பார்க்காத சம்பளத்தை வழங்கியதுடன் பயணத்திற்காக சொகுசு கார்களையும் கொடுத்தது. இதனால் அந்த ஊடகவியலாளர்கள் சமூகத்தில் அந்தஸ்துடன் சந்தோஷமாக வாழ தொடங்கினார்கள்.

ஆனால் இது உண்மையில் ஆரோக்கியமான விடயமா..? என்ற கேள்வியை நாம் எழுப்பி பார்த்தால் சில சந்தேகங்கள் எமக்கு வருகிறது.ஏனெனில் இந்த ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை ஏற்படுகிறது.

குறிப்பாக முதலாளிமார் தலைமையிலான நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயற்பட வேண்டிய கட்டாய நிலை உருவாகிறது.

நிர்வாகத்தினர் ஆத்திரத்தில் எம்மை வேலையில் இருந்து தூக்கி விட்டால் எமது நிலை என்னவாகும் என்ற பயம் ஊடகவியலாளர்களை துரத்துகிறது.

இதனால் சுதந்திரமாக செயற்பட வேண்டிய ஊடகவியலாளர்கள் சிலர் ( எல்லோரும் இல்லை..) தொழில் பயத்தில் அடிமைகளாக மாற்றப்படுகிறார்கள்.

சுதந்திரமாக செயற்பட வேண்டிய ஊடகவியலாளர்களை இவ்வாறு கட்டி போடுவது நியாயமற்றது. இதனை யார் பேசப்போகிறார்கள்.குறைந்த சம்பளத்தில் சுதந்திரமாக இருப்பது ஊடக துறைக்கு என்னவோ நல்லது..ஆனால் குடும்பம் என்று வரும் போது ..ஊடகவியலாளர்கள் என்ன செய்வார்கள்?

ஊடகவியலாளர்களின் நலன் சார் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய ஊடக அமைப்புகளில் தமக்கு தொடர்பு இல்லாத அரசியல் விடயங்களில் மூக்கை நுழைக்கிறது.

அரசியல் விடயங்களை தவிர்த்து ஊடகவியலாளர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய போராட வேண்டும்

ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட கூடிய முறையில் அரசாங்கம் நல்ல செயற்திட்டங்களை அரசியல் பேதமின்றி உருவாக்க வேண்டும். இல்லையேல் சுதந்திர ஊடகம் என்பது வாய் பேச்சாகவே இருக்கும்.

குறிப்பாக சில ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகளின் அடிமைகளாக செயற்படுகிறார்கள். இதற்கான காரணம் என்ன…? என்பதை ஆராய்ய வேண்டும்.

ஒரு சிலரின் செயற்பாடுகளினால் ஏனைய ஊடகவியாளர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இதனை தடுக்க வேண்டுமானால் அவர்கள் நன்றாக போஷிக்கப்பட வேண்டும் .

ஊடகம் என்பது ஒரு தர்மம், அந்த தர்மத்தை செயற்படுத்தும் ஊடகவியலாளர்களை மதித்து செயற்பட வைப்பது அனைவரதும் கடமை.

-தினேஷ்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here