முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அவிசாவளையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் அந்த இடத்திலேயே பலி!

அவிசாவளையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் அந்த இடத்திலேயே பலி!

அவிசாவளை உக்குவத்தை சந்தியில் நேற்று (17.08.2018) நிகழ்ந்த பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானார்.
உக்குவத்தை சந்தியில் பாதை மின்விளக்கு சமிக்ஞையின் போது நிறுத்தப்பட்டு, பின் புறப்படுகின்றபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பேருந்து சாரதியின் கவனயீனமே இந்த விபத்துக்கு காரணமென விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவிசாவளை பொலிசார் பஸ் சாரதியை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆர்.கமலதாஸ்

Leave a Reply

error: Content is protected !!