முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அட்டன் எரிபொருள் நிலையத்தில் இப்படியும் நடந்தது; மக்களே அவதானம்!

அட்டன் எரிபொருள் நிலையத்தில் இப்படியும் நடந்தது; மக்களே அவதானம்!

அவசர அழைப்பொன்றை மனைவிக்கு எடுக்கவென கைப்பேசியை வாங்கிய நபர் தலைமறைவாகிய சம்பவமொன்று அட்டனில் இடம்பெற்றுள்ளது

அட்டன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரியும் ஊழியரிடம் கைபேசியை பெற்றுக்கொண்டு தப்பியோடியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

06

அட்டன் நகர மத்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 30.08.2017 மதியம் 1 மணியளவில் எரிபொருள் நிரப்ப வாகண நெரிசல் காணப்பட்ட சந்தப்பத்தில் திடீரென அவ்விடத்திற்கு வந்த நபர் தனது மனைவிக்கு அவசரமாக அழைப்பென்றை எடுக்கவேண்டும் என கூடி எரிபொருள் நிரப்பு ஊழியரிடம் கைபேசியை பெற்றுள்ளார்

அப்போது வந்த வாகனமொன்றுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு பார்த்த போது 35ஆயிரம் ரூபா பெருமதியான கைபேசியை பெற்றவர் தலைமாமறைவானார்

இச்சம்பவம் நிலையத்தின் சீ.சீடீ.வி கமராவில் பதிவாகியுள்ள நிலையில் அட்டன் பொலிஸ் நிலையத்திலும் முறைபாடு செய்யப்பட்டுள்ளது தப்பிச்சென்ற நபரை கைது செய்யும் நடவடிக்கையில் அட்டன் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Leave a Reply

error: Content is protected !!