27 வருடங்களின் பின்னர் புலத்கொஹுபிட்டியவில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம்!

புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் சுமார் 27 வருடங்களுக்கு பின்னர் பாரிய இயற்கை அனர்த்தம் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 1989ஆம் ஆண்டு ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் நாடு முழுவதும் 300 பேர்  வரையில் உயிரிழந்திருந்ததாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் டி.பி.அல்விஸ் ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கேகாலை மாவட்டம் புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள தோட்டப்பகுதிகளின் ஏற்பட்ட மண்சரிவில் சுமார் 244 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 17ஆம் திகதி இரவு புலத்கொஹுபிட்டிய – களுபான தோட்டத்தில் அமைந்துள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட மண்சரிவினால் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லயன் குடியிருப்பில் அமைந்திருந்த ஆறு வீடுகள் மண்ணில் புதையுண்டதோடு, காணாமற்போயிருந்த 16 பேரில் 14 பேரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இருவரது நிலைமை தொடர்பில் எவ்வித தகவலும் வெளிவராதபோதிலும் உயிரிழந்துவிட்டதாக மீட்புப் பணிகளை முன்னெடுத்த படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1989ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரதேசத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் இதுவென அறிவிக்கப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 144 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan