இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 7 பலி!
ஜகர்தா – இந்தோனேசியா நாட்டுக்கு உட்பட்ட சுமத்ரா தீவில் உள்ள ஏரிமலை வெடித்து தீப்பிழம்பை கக்கிய சம்பவத்தில் ஏழுபேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட ஏராளமான தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடாக இருந்து வருகிறது.
இங்குள்ள தீவிகளில் காணப்படும் 120-க்கும் மேற்பட்ட எரிமலைகள் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. பார்வைக்கு அமைதியாக காணப்படும் இந்த எரிமலைகள் சீறத் தொடங்கினால் நூற்றுக்கணக்கான உயிர்களை பதம்பார்க்காமல் அடங்குவதில்லை என்பதை சமீபகால நிகழ்வுகள் உணர்த்தியுள்ளன.
இந்நிலயில், இங்குள்ள சுமத்ரா தீவில் உள்ள 2460 மீட்டர் உயரமான சினபங் எரிமலை நேற்று புகை, சாம்பல் மற்றும் தீப்பிழம்புகளை கக்கியபடி பயங்கரமாக சீறியது.
இந்த சீற்றத்தின் விளைவாக எரிமலையின் அடிவாரத்தில் உள்ள கிராமங்களை நோக்கி சூடான பாறைகளும், தீக்குழம்பும் தெறித்து விழுந்தன.
இந்த இயற்கை சீற்றத்துக்கு ஏழுபேர் பலியானதாகவும், காணாமல்போன பலரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
181 total views, 2 views today
CATEGORIES உலகம்