முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Sport > உபாதை காரணாமாக துஷ்மந்தவும் நாடு திரும்பினார்!

உபாதை காரணாமாக துஷ்மந்தவும் நாடு திரும்பினார்!

24 வயதான வலக்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடும் டெஸ்ட் இல் முதல் இனிங்க்சில் 3 விக்கெட்களை கைப்பற்றியிருந்த நிலையில் பின்முதுகில் ஏற்பட்ட உபாதை காரணமாக மீண்டும் சிகிச்சைக்காக இலங்கை திரும்பியுள்ளார்.

சமீரவினது பின் முதுகில் ஏற்பட்ட உபாதைக்கு இன்று காலை MRI/CT ஆகிய ஸ்கேன் பரிசோதனைகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் குறைந்தது சிகிச்சையுடன் நான்கு மாதகாலம் ஓய்வில் இருக்குமாறும் வைத்தியர்களால் பணிக்கப்பட்டுள்ளார் .

இன்னும், நடுநிலை வேகப்பந்து வீச்சாளரான தம்மிக பிரசாத் உம் உபாதை காரணமாக இலங்கை திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், துஷ்மந்தவினது இடத்தினை நிரப்புவதற்கு சனத் ஜயசூரிய தலைமையிலான தேர்வுக்குழுவினரால் இன்னும் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

error: Content is protected !!