முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > விளையாட்டு > IPL தொடரில் கொல்கத்தா அணி வெளியேறியது!

IPL தொடரில் கொல்கத்தா அணி வெளியேறியது!

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்- கொல்கத்தா அணிகள் மோதின.

இதில் தடுமாற்றத்துடன் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணிக்கு ஹென்றிக்ஸ் (31), யுவராஜ் சிங், ஹொடா (21) ஆகியோர் கைகொடுக்க 20 ஓவரில் 162 ஓட்டங்கள் குவித்தது.

இதில் யுவராஜ் சிங் சிறப்பாக ஆடி  44 ஓட்டங்கள் குவித்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 4 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்த மைல்கல்லை எட்டிய இந்திய வீரர்களில் 10வது வீரராக இணைந்துள்ளார்.

இதன் பிறகு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணியால் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் 22 ஓட்டங்களால் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

அதேசமயம் இந்த தொடரில் அசத்தி வந்த கொல்கத்தா அணி தொடரை விட்டு வெளியேறியது.நாளை டெல்லியில் நடக்கும் 2வது வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் அணி குஜராத் அணியை சந்திக்கிறது.

Leave a Reply

error: Content is protected !!