முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > கட்டுரை > முன்கூட்டிய ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்த சி.இரவிந்திரன்!!

முன்கூட்டிய ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்த சி.இரவிந்திரன்!!

ஆசிரியர்கள் என்பவர்கள் சமூகத்தின் சிற்பிகள் அவர்கள் தான் நல்லவனை உருவாக்குகின்றார்கள். அவர்கள்தான் வல்லவனை உருவாக்குகின்றர்கள் அவர்களேத்தான் அதற்கு எதிர் மாறானவனையும் உருவாக்குகின்றார்கள்.

இப்படியாக எல்லாவற்றையும் உருவாக்க கூடிய வல்லமை பெற்ற ஆசிரியர்கள் எல்லாமும் பெற்று வாழ்கின்றார்களா என்றால்… அது இல்லை என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.

மலையகத்தை பொறுத்த வரையில் கல்வித்துறையில் அரசியல் தலையீடுகள் அதிகம் இருக்கின்றன.ஆசிரியர்கள் சுதந்திரமாக செயற்படக்கூடிய வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.

ஆசிரியர் நியமனங்களின் போதும் இடமாற்றங்களின் போதும் அல்லது பதவியுயர்வுகளின் போதும் இந்நிலைமையை அவதானிக்க கூடியதாக உள்ளது. கல்விதிணைக்களங்களில் ஆசிரியர்களை மதிக்காத தன்மை காணப்படுகின்றன.

வலய கல்வி காரியாலயங்களில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் தான் தங்கள் காரியங்களை சாதிக்கலாம் என்ற நிலைமைகள் காணப்படுகின்றன.
எனவே சாதாரண சிற்றூழியர்களை கூட அனுசரித்தே செல்ல வேண்டியிருக்கிறது. அதே நேரம் இன விகிதாசாரமும் முறையாக பேணப்படவில்லை. தமிழுக்கு உரிய அதிகாரிகள் நியமிக்கப்படாத காரணத்தால் பல்வேறு அசௌகரியங்களை நமது ஆசிரியர்கள் எதிர் நோக்கி வருகின்றார்கள். தமிழ் மொழியில் கடிதங்கள் சரியான முறையில் ஆசிரியர்களுக்கும் பாடசாலைகளுக்கும் கிடைப்பதில்லை.

அப்படி கிடைத்தாலும் போதிய விளக்கங்கள் இருப்பதில்லை. இந்நிலைமையை மாற்றியமைக்க கல்வி சமூகமானது பலமுள்ளதாக இருக்க வேண்டும்.ஆசிரியர்களை எடுப்பார் கைப்பிள்ளைகளாக நினைக்கும் காலம் மாற வேண்டும்.

“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” எனும் அப்பர் சுவாமிகளின் கூற்றுக்கேற்ப ஆசிரியர்கள் எவருக்கும் அஞ்சி வாழ வேண்டிய தேவைகள் இல்லை.
ஆசிரியர்கள் தான் அரசியல் வாதிகளை உருவாக்குகின்றார்கள் அரசியல் சித்தாந்தங்களை உருவாக்குகின்றார்கள். இத்தகைய ஆசிரியர்களின் நிலை ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

சமூகத்தை மாற்றியமைக்கக்கூடிய சமூக விழுமியங்களை பாதுகாக்க கூடிய எம் சமூகத்தின் இருப்பை தக்கவைத்துக்கொள்ளக் கூடிய சிறந்த ஆயுதம் கல்வியொன்றே. அவ்வாயுதம் ஆசிரியர்களின் கைகளில் உள்ளது என்பதை மறந்து விடலாகாது.

“சொற்விற்பன்னமும்ர அவதானமும் கல்விசொல்லவல்ல நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்! நளின ஆசனம்சேர் செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும் கல்விப் பெறுஞ்செல்வப்பேறே!
சகலகலாவல்லியே! என உருகும் குமரகுருபரரின் பாடலை நினைவு கூர்ந்து அனைத்து ஆசிரியர்களுக்கும் எமது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கின்றேன்.

சி.இரவிந்திரன்.
பொதுச்செயலாளர்.
மலையக ஆசிரியர் முன்னணி

Leave a Reply

error: Content is protected !!