முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > கட்டுரை > பாலியல் இம்சைகளுக்கு ஆளாகும் மலையக பெண்கள்! பாதிக்கப்பட்டோரின் ஆதங்கம்!!

பாலியல் இம்சைகளுக்கு ஆளாகும் மலையக பெண்கள்! பாதிக்கப்பட்டோரின் ஆதங்கம்!!

இலங்கைக்கு புகழ் சேர்ப்பதும் எழில்மிகு அழகு கொண்ட பகுதியாக மலையகம் காணப்படுகிறது.

மலையகம் எங்கும் பூத்துக்கிடக்கும் பனிக் குவியல்களுக்கு உறைந்திருக்கும் ஈரத்தைப் போன்று, பல பெண்களின் மனங்களில் ஆறாத வடுவாய் பல துன்பங்கள் உறைந்துள்ளன.

குடும்பத்தின் வறுமையை போக்க, எதிர்கால கனவுடன் வீட்டை விட்டு வெளியில் செல்லும் பல பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு முகங்கொடுக்கும் கொடூர சம்பவங்கள் மலையகத்தில் அதிகரித்துள்ளது.

மாணவிகள் முதல் குடும்ப பெண்கள் வரை பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக பாதிக்கப்பட்ட பலர் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர். fgfgfg

பல்வேறு வடிவங்களில் பல பெண்கள் பாலியல் இம்சைகளுக்கு ஆளாகி உள்ளனர். பாடசாலைக்கு செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் யுவதிகள் மற்றும் குடும்ப பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்துகள், கல்வி நிலையங்கள், தொண்டு நிறுவனங்கள் என்பவன்றில் பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதில் திருமணமான ஆண்கள் மற்றும் முதியவர்களினால் பாலியல் தொந்தரவுகள் மேற்கொள்வது பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்துகளில் பயணிக்கும் மாணவிகள், பெண்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றன. பேருந்துகளில் பயணிக்கும் ஆண்கள் பெண்களின் பின்னால் நெருக்கமாக நிற்பதுடன் அங்க சேட்டையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. dfgdfggfdfgdgdgdgdgd

அதேவேளை பேருந்து ஆசனத்தில் அமர்ந்து செல்லும் பெண்களிடமும் தகாத முறையில் நடந்து கொள்வதும், எல்லை மீறிச் செயற்படுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான பாதிப்புகளுக்கு உள்ளான மாணவிகள், பெண்கள் பாடசாலை மற்றும் வேலைக்களுக்கு செல்ல அச்சப்படுவதுடன், வீடுகளில் முடங்கிக் கிடப்பதுடன் அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது.

எதிர்காலத்தை எண்ணி கனவுகளுடன் கல்வி நிலையங்களுக்கு செல்லும் இளம் யுவதிகள், அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களால் பாலியல் இம்சைகளுக்கு ஆளாகின்றனர்.

தமது ஆசைக்கு இணக்காத மாணவிகளை பழிவாங்குவதுடன் அவர்களின் எதிர்காலத்தையும் நிர்மூலமாக்கி விடுகின்றனர்.

சில யுவதிகளுக்கு ஆசை வார்த்தை காட்டி காதல் எனும் மாய வலையில் சிக்க வைத்து, தமது காமபசியை தீர்த்துக்கொள்ளும் மிருகங்கள் மலையகத்தில் அதிகரித்துள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொறுப்புமிக்க பதவிகளில் செயற்படுவர்கள் தம்நிலை மறந்து, இளம் பெண்களை குறித்து காமவெறியை தீர்ப்பதுடன், அவர்களின் உயிர்கள் பறிபோகவும் வழி செய்கின்றனர்.

வயது முதிர்ந்த ஆண்களுடன் காதல் வலையில் சிக்கும் பெண்கள் ஏமாற்றம் தாங்க முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் பல நுவரெலியாவில் பதிவாகி உள்ளது.

பல்வேறுபட்ட ஆண்களால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் அவமானம், அச்சம் காரணமாக தமது நிலைகளை வெளிப்படுத்தாமல் மனநோயாளியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான ஆபத்தான நிலை குறித்து மலையக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வீதிகளில் பெண்கள் நிமத்தியாக செல்ல முடியாத பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. வீதியில் செல்லும் ஆண்களின் நையாண்டி, நக்கல் மற்றும் முகபாவ செய்கையால் பல பெண்கள் அச்சப்பட்டுள்ளனர்.

பெண்களை அவமானப்படுத்தும் அருவருக்கத்தக்க செயல்களை பல ஆண்கள் செய்வதாக சமூக ஆர்வலர்கள் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.

சமூகத்தில் இவ்வாறான கலாச்சார சீரழிவுகள் தீவிரம் பெற என்ன காரணம் என்பதை கண்டறிந்து அதற்கான தீர்வினை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும்.

Leave a Reply

error: Content is protected !!