முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > நிகழ்வுகள் > 1098 கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய ஆயிரம் கவிதை தொகுப்பு!!

1098 கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய ஆயிரம் கவிதை தொகுப்பு!!

http://thermograve.co.uk/2015/03/ 32 நாடுகளில் பரந்து வாழும் 1098 தமிழ் கவிஞர்கள் பங்கு பற்றுதலோடு 1861 ஏ4 தாள்கள் கொண்ட சுமார் 4.415 கிலோ கிராம் எடை கொண்ட உலக வாழ் சிறந்த தமிழ் கவிஞர்களின் ஒரு தொகுப்பாக மாபெரும் நூலாக உருவாகி நாளைய தினம்.

real orlistat 120 mg without prescription 21-102017 (சனிக்கிழமை)
காலை 9.30 மணிக்கு
இலங்கையின் யாழ்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்
மிகவும் கோலாகலமாக வெளிவர இருக்கிறது.
“1000 கவிஞர்கள்” நூல்

source site இந்த நூலில் நவீன கால பிரபல்யமான தமிழ் கவிஞர்கள் உட்பட முத்திரை பதித்த பல தமிழ் கவிஞர்கள் பற்றிய அறிமுகம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதில் இலங்கையின் வடக்கு ,கிழக்கு ,மலையகம் உட்பட அனைத்து இடங்களிலும் உள்ள கவிஞர்களும், இந்தியா உட்பட பல ஆசிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பிரபலமான ஆயிரம் கவிஞர்களும் இதில் உள்ளடக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக தென்னிந்திய கவிஞர்களான பிரசித்தி பெற்ற
கவிஞர் வைர முத்து
காலஞ்சென்ற நா முத்துகுமார்
கவிக்கோ அப்துல் ரஹ்மான்
நடிகர் கமல்ஹாசன்
ஈழத்து பிரபல கவிஞர் காசி ஆனந்த் உட்பட மேலும் பலரோடு நம் மலையகத்தின் பிரபல கவிஞர்களும் உள்ளடக்கப்பட்டிருப்பது நமக்கான பெருமை.

உலக வரலாற்றில் ஒரு சரித்திரம் படைக்க காத்திருக்கும் இன்னூல் இலங்கையில் வெளியீட்டின் பின்னர் பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, கனடா, சுவிட்ஸர்லாந்து, இந்தியா போன்ற நாடுகளிலும் வெளியாக இருக்கிறது.

இன்னூல் வெளியீட்டில் பங்குபெறும் மலையகத்தை பிரதினிதித்துவப்படுத்தும் மற்றும் நூலில் இடம்பெறும் என பல கவிஞர்கள் பங்குபற்றுவதுடன் பலர் விழா மேடையில் கௌரவிக்கப்பட இருப்பது மலையக எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் மாபெரும் கௌரவமாகும் .

இந்நூல் வெளியீட்டின் பின்னர் பிரதிகளை இந்த மாபெரும் நூலின் இயக்குனராக இலங்கையின் முல்லைத்தீவை சேர்ந்த கவிஞர் எழுத்தாளர் சமூக ஆர்வளர் வெளியீட்டாளர் என பன்முகம் கொண்ட திரு “யோ புரட்சி ” அவர்களை தொடர்பு கொள்ளலாம். தொடர்புகளுக்கு : 077-5892351

இந்நூலின் பதிப்புரிமையினை பெற்றிருக்கிறார் கனடா வாழ் தமிழ் பற்றாளர், இலக்கிய ஆர்வளர் , சமூக சேவகர் என பன்முகம் கொண்ட ஆளுமை “திருமதி யமுனா நித்யானந்தன் “அவர்கள் நூல் வெளியீட்டில் பங்குபெறும் மற்றும் நூலில் இடம்பெறும் அனைத்து கவிஞர்களுக்கும் குறிப்பாக மலையக எழுத்தாளர்களுக்கும் இந்த நூல் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்க நிரந்தரம்
வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே !

ஷான் சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!