முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > சினிமா > நடிகர் பாலுஆனந்த் மரணம்!

நடிகர் பாலுஆனந்த் மரணம்!

விஜயகாந்த் நடித்த நானே ராஜா நானே மந்திரி, நடிகர் சத்யராஜ் நடித்த அண்ணாநகர் முதல் தெரு மற்றும் ரசிகன் ஒரு ரசிகை, உனக்காகப் பிறந்தேன், பொட்டுவச்ச நேரம், சிந்துபாத் உள்ளிட்ட பல பங்களை இயக்கியவர் பாலு ஆனந்த்.

மேலும், பவர்ஸ்டார் சீனிவாசனை வைத்து ஆனந்த தொல்லை என்ற படத்தை கடைசியாக இயக்கினார். ஆனால் அந்தப் படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் நிலுவையில் உள்ளது. இத்துடன் பல்வேறு தமிழ் படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்கள் மனங்களை கவர்ந்தவர்.

இந்த நிலையில், அவரது சொந்த ஊரான கோவையில் அவர் இருந்த போது, இன்று காலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, பாலுவை அவரது குடும்பத்தினர் மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் முன்பே உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த தமிழ் திரையுலம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

Leave a Reply

error: Content is protected !!