முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை இனி கட்டாயமில்லை! : பிரதமர்

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை இனி கட்டாயமில்லை! : பிரதமர்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இனிமேல் முக்கியமான ஒன்றாக இருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த பரீட்சை புதிய கல்வி கட்டமைப்பின் அடிப்படையில் வெறுமனே மாணவர்களின் வகுப்பேற்றத்தை ஊக்குவிக்கும் ஒன்றாகவே இருக்கும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் பல்கலைகழகத்திற்கு பிரவேசிக்க எதிர்பார்த்துள்ளதாக மாணவர்களுக்கு சில பாடங்கள் கட்டாயமானது என அவர் கூறியுள்ளார்.

கல்வி பொதுத் தராதர சாதரண தரப் பரீட்சையின் பின்னர் ஒவ்வொரு மாணவரும் வகுப்பேற்றப்படுவார்கள் என நீர்கொழும்பிலுள்ள பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது பிரதமர் குறிப்பிட்டார்.

மாணவர்களின் பரீட்சை சுமையை குறைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

உலகில் மிகவும் வலிமையான நாடாக கருதப்படும் அமெரிக்காவின் கல்வி கட்டமைப்பில் எந்தவொரு பரீட்சையும் இல்லை என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அவ்வாறான கட்டமைப்பை நாமும் அமுல்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

error: Content is protected !!