ஜனாதிபதிக்கு மீண்டும் சீனாவிற்கு அழைப்பு!

0
133

இரு­நாட்டு உறவுகளையும் மேலும் வலுப்­ப­டுத்தும் வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு சீன ஜனா­தி­பதி ஜின் பிங் விசேட அழைப்பு விடுத்­துள்­ள­தாக அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்­க­ளத்­தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பி­ன் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்;

எமது நாட்டில் ஆட்சி மாற்றத்­தினை தொடர்ந்து சீனா­வு­ட­னான பொருளாதார உறவும் அர­சியல் உறவும் முற்­றாக பாதிப்­பட்­டுள்­ள­தாக எதி­ர்ப்­புக்கள் பல விமர்­சங்­களை முன்­வைத்­தி­ருந்­தன.

இது தொடர்பில் அர­சாங்கம் எந்தவி­த­மான கருத்­துக்­க­ளையும் முன்வைக்காத நிலை­யி­லேயே எதிர்­த­ரப்­புக்கள் இவ்­வா­றான கருத்துக்களை வெளி­யிட்டு வந்­தன.

இந்­நி­லையில் கடந்த காலங்­களில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் சீனா­விற்­கான விஜயம் மேற்கொண்­டி­ருந்த போது பொரு­ளா­தாரம் மற்றும் அர­சியல் உடன்படிக்கைகள் கைச்சாத்­திடப்­பட்­ட­ன. அதனால் இரு­நாட்டு பொருளாதார உற­வுகள் வலு­வ­டைந்­தன.

இந்­நி­லையில். தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சீனாவிற்கான விஜ­ய­மொன்றை மேற்கொள்­ளு­மாறு சீன ஜனா­தி­பதி ஜின்பிங் விஷேட அழைப்பு விடுத்­துள்­ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here