முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > மலையகம் > அக்கரப்பத்தனை நகரதில் பொது மலசலகூடம் அமைக்க கோரிக்கை!

அக்கரப்பத்தனை நகரதில் பொது மலசலகூடம் அமைக்க கோரிக்கை!

நாட்டில் பல மாவட்டங்களில் உள்ள நகரங்கள் இன்று பாரிய அபிவித்தியை கண்டுள்ளது. குறிப்பாக பல நகரங்களில் பொது மலசல கூட நுழைவாயில் சீ.சீ.டி.வீ கமரக்கள் பொருத்தப்பட்டுள்ள. இந்த காலகட்டத்தில் மலையகத்தில் அதும் அக்கரப்பத்தனை பிரதான நகரத்தில் மலசல கூடம் இல்லை என்பது எதனை காட்டுகின்றது.

மலையக அரசியல் வாதிகளின் இயலாமையை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.

அக்கரப்பத்தனை பிரதேசம் பல அரசியல் வாதிகளை தெரிவு செய்ய கூடிய பகுதியாகும் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தலின் போது இம்மக்களின் வாக்குகளை பெற செயல்பட்ட நபர்கள் தேர்தல் வெற்றியின் பின் அபிவிருத்தி செயல்பாட்டில் அக்கறைகாட்டுவதில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

நுவரெலியா பிரதேசசபைக்குட்பட்ட அக்கரப்பத்தனை நகரம் மிகமுக்கியமானதாகும்.

இந்நகரத்தில் 75 இற்கு அதிகமான வியாபார கடைகள் தபாலகம் பிரதான வங்கிகள் இரண்டு விகாரை உட்பட இந்து ஆலயம் உயர்தர பாடசாலைகள் இரண்டும் உள்ளன.

ஒவ்வொறு நாளும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் நகரத்திற்கு வந்து செல்கின்றனர்.

அத்தோடு இங்கு உள்ள கடைகளில் தொழில் புரியும் நபர்கள் காலையில் தொழிலுக்கு வந்து மாலை வேளையில் வீடுசெல்கின்றனர் அதிகமான வியாபாரிகள் வெளிமாவட்டத்தினை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.

இந்நகரத்தில் 30 வருடகாலமாக பொதுமக்கள் பாவனைக்காக மலசல கூடம் இன்மையால் பொது மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது இந்நகரத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் கடைகளில் தொழில் செய்யும் ஊழியர்கள் உட்பட பாடசாலைகளுக்கு வரும் மாணவ மாணவிகளும் பல சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

மலசல கூடம் இன்மையால் பொதுமக்கள் மறைவான இடங்களில் சிறுநீர் கழிப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசப்படுவதோடு சகாதார சீர்கேடுகள் எற்பட்டுள்ளதோடு நுளம்பு தொல்லை அதிகரித்துள்ளதால் நோய்கள் பரவகூடிய அபாயம் உள்ளது.

எனவே இ தனை கருத்தில் கொண்டு இதற்கு பொறுப்பு வாய்த நுவரெலியா பிரதேசசபை அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இப்பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அக்கரப்பத்தனை நிருபர் புஸ்பராஜ்

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle