முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > கட்டுரை > சிறுவா் துஸ்பிரயோகமும் ஊடகங்களின் பங்களிப்பும்…….

சிறுவா் துஸ்பிரயோகமும் ஊடகங்களின் பங்களிப்பும்…….

சிறுவா் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்த எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டாலும் தொடா்ந்தும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் துஸ்பிரயோகிகள் தங்கள் துஸ்பிரயோக நடவடிக்கைகளை புதிது புதிதான முறைகளை கையாண்டு மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த பின்னனியில் அனைத்து ஊடகங்களும் சிறுவா் துஸ்பிரயோகம் தொடா்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

இவ்வாறு துஸ்பிரயோகம் தொடா்பான செய்திகளால் மக்கள் சிறுவா் துஸ்பிரயோகம் தொடா்பான விழிப்புணா்வு ஏற்பட்டு தங்கள் பாதுகாப்பு குறித்து கவனமாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து அறிந்து கொள்கிறார்கள்.

அத்துடன்  அரசாங்கம் இ கொள்கை வகுப்பாளர்கள்மற்றும் பொலிஸார் உட்பட சட்டத்தை நடைமுறைபடுத்துபவா்கள் சிறுவா் துஸ்பிரயோகத்தை கட்டுப்படுத்துவதற்கு மேலும் காத்திரமான நடவடிக்ககைள் எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணா்கிறார்கள். அந்த வகையில் ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

இதே வேளையில் சிறுவா் பாலியல் ரீதியான அல்லது துன்புறுத்தல் தொடா்பான அல்லது வேறு துஸ்பிரயோகம் தொடா்பான செய்திகளை வெளியிடும் போது சிறுவரின் சிறந்த நலன் தொடா்பான விடயத்தை கவனத்தில் கொண்டு ஊடகங்கள் செய்தி வெளியிடுவது அவசியமானது.

சிறுவா் துஸ்பிரயோகங்கள் தொடா்பான செய்திகளை வெளியிடும் போது பாதிக்கப்பட்ட சிறுவரின் பெயா் உட்பட எல்லா விபரங்களை வெளியிடுவது அவா்களின் புகைப்படங்களை வெளியிடுவது என்பது சிறுவா் உரிமையை மீறுவதும்  அது சிறுவா்களுக்க பாதிப்பு ஏற்படுத்துவமான விடயம் என்பதை சில ஊடகங்கள் கவனத்தில் கொள்வதில்லை.

சிறுவா் உரிமை சமவாயத்தின்16வது உரிப்புரிமை பின்வருமாறு கூறுகிறது.
பிள்ளைகள் தங்கள் அந்தரங்கத்தைப் பேண உரிமையுடையவர்கள். தம் அந்தரங்கம் குடும்பம் வீடு  ஆகியவற்றுக்கு பாதுகாப்புப் பெறும் உரிமை அவர்களுக்கு உண்டு.

ஊடகங்கள் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெயா்கள் புகைப்படங்கள் பத்திரிக்கைளில் வெளிவரும்போது அது அந்த பிள்ளையினை  பாதிப்பதுடன் நீண்ட கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட பிள்ளைகள் மற்றவா்கள் மத்தியில் தவறாக அடையாளம் காணப்படுதல் கேலிக்கு உள்ளாக்கப்பட்டு மன உலைச்சலுக்கு உள்ளாக்கப்படுதல் தனிமைப்படுத்தப்படுதல்போன்ற பல்வேறு தாக்கங்களை எதிர்நோக்க வேண்டி நிலை ஏற்படுகிறது.

இதனால் ஊடகங்கள் நல்ல நோக்கத்தோடு செய்திகளை வெளியிடுவதாக எண்ணினாலும் நீண்ட கால அடிப்படையில் பிள்ளைகளுக்கு பாதிப்பே ஏற்படுகிறது.
இதனால் சிறுவா் துஸ்பிரயோகம் அல்லது சிறுவா் தொடர்பான பாதிப்பான எந்த விடயம் தொடா்பாக செய்திகளை வெளியிடும் போது ஊடகங்கள் மிகவும் கவனமாகவும்  விசேடமாக புகைப்படங்கள் பிள்ளை தொடா்பாக விளக்கங்கள் என்பவற்றை தவிர்ப்பது முக்கியமாகும். இதனை ஒரு ஊடக கலாச்சாரமாக உருவாக்க நாம் முயலவேண்டும்.

சிறுவா் துஸ்பிரயோகங்கள் நடக்கும் போது அவை தொடா்பான செய்திகளை ஊடகவியலாளருக்கு வழங்கும் போது நாம் இதுவிடயத்தில் கவனமாக இருப்பதும் ஊடகவியலாளருக்கு இந்த விடயங்கள் தொடா்பாக விழிப்புணாவூட்டுவதும் நமது கடமையாகும்.

இன்று அதிகமானவர்கள் முகப்புத்தகத்தில் எந்த ஒரு விடயமாக இருந்தாலும் உடனடியாக பதிவேற்றுகின்றார்கள் குறிப்பாக தற்கொலை தீ வைத்துகொள்ளுதல் சிறுவா் துஸ்பிரயோகம் மற்றும் பாலியல் தொடர்பான புகைப்படங்கள் என பதிவு செய்வதால் பலர் மனரீதியாக பாதிக்கப்படுவதை உணரமுடிகின்றது.

இவ்வாறான விடயங்களை தவிர்த்துகொள்வது மிகமுக்கிய விடயமாகும் ஊடகங்கள் தொடா்பாக பிரிடோ முன்பள்ளி ஆசிரியைகளுக்காக நடத்தப்பட்ட செயலமா்வில் பிரிடோ நிறுவனத் தலைவா் மைக்கல் ஜோக்கிம் இவ்வாறு தெரிவத்தார்.
அக்கரப்பத்தனை நிருபர்

Leave a Reply

error: Content is protected !!