முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > உலகம் > ஈரானை தாக்கிய பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்வு..

ஈரானை தாக்கிய பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்வு..

ஈரானை தாக்கிய பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ள அதேவேளை மலைப்பகுதியில் ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக இடிபாடுகளிற்குள் சிக்கியவர்களை மீட்பதற்கு மீட்பு பணியாளர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

பூகம்பம் காரணமாக 438பேர் ஈரானில் மாத்திரம் பலியாகியுள்ளதாக 7000பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டின் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

பூகம்பத்தின் தாக்கத்தை ஈரானின் பல மாநிலங்கள் உணர்ந்துள்ள போதிலும் கெர்மான்சா பிராந்தியமே மோசமான அழிவுகளை சந்தித்துள்ளது.

பூகம்பம் காரணமாக ஈரானின் சில கிராமங்கள் பாரிய அழிவை சந்தித்துள்ளதாக அந்த நாட்டின் தேசிய தொலைக்காட்சி தெரிவி;த்துள்ளது.மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்காக பலத்த சிரமத்தை எதிர்கொள்வதாகவும் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சர்போல் ஈ ஜகாப் பகுதியில் குழந்தையொன்றும் தாயும் உயிருடன் மீட்கப்பட்டதாக ஈரானிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

error: Content is protected !!