முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Top News > அமெரிக்காவில் மோடி – ஒபாமாவுடன் 2 ஆண்டுகளில் 7வது முறையாக சந்திப்பு!

அமெரிக்காவில் மோடி – ஒபாமாவுடன் 2 ஆண்டுகளில் 7வது முறையாக சந்திப்பு!

வாஷிங்டன் – பொதுவாக அமெரிக்க அதிபர் ஒருவர் உலகத் தலைவர்களைச் சந்திப்பது என்பது வெகு அபூர்வமாகவே நடைபெறும். ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற காலத்திலிருந்து அவருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இடையிலான சந்திப்பு, ஏதோ பக்கத்து வீட்டுக்காரர்களைப் போல அடிக்கடி நடந்து கொண்டே இருக்கின்றது.

அந்த வகையில், எதிர்வரும் ஜனவரியோடு பதவி விலகிச் செல்லும் ஒபாமா, தனது பதவிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் பல முக்கியத் தலைவர்களைச் சந்தித்து வருகின்றார். நேற்று ஒபாமா- மோடி இடையிலான சந்திப்பு மோடி பதவியேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில் 7வது முறையாக நடைபெறுவதாகும்.

இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளும் இணைந்த கூட்டத்தில் நரேந்திர மோடி வரலாற்றுபூர்வ உரையாற்றவிருக்கின்றார். அமெரிக்க நாடாளுமன்றம், செனட் சபை என இரண்டு அவைகளும் இணைந்த கூட்டத்தில் ஓர் உலகத் தலைவர் உரையாற்றுவது அபூர்வமான அங்கீகாரமாகும். அவ்வாறு உரையாற்றுகின்ற ஐந்தாவது இந்தியப் பிரதமர் மோடியாவார்.

மோடிக்கு முன்பாக கடைசியாக கூட்டு அமெரிக்க நாடாளுமன்ற அவையில் பேசிய உலகத் தலைவர் போப்பாண்டவர் ஆவார்.

Leave a Reply

error: Content is protected !!