முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > திடீரென மாறி அதிர்ச்சி கொடுத்த நுவரெலியா!!

திடீரென மாறி அதிர்ச்சி கொடுத்த நுவரெலியா!!

திடீரென மாறி அதிர்ச்சி கொடுத்த நுவரெலியா….

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வழமைக்கு மாறாக இயற்கையில் மாற்றங்கள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் நுவரெலியாவில் ஏற்பட்ட திடீர் மாற்றம் குறித்து மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

மாலை ஆறு மணியளவில் நுவரெலியா இருளில் மூழ்கிப் போவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக ஆறு மணி என்பது மங்கலான வெளிச்சத்துடன் காணப்படும். எனினும் கடந்த சில தினங்களில் ஐந்து மணியளவில் இருள் சூழத் தொடங்குவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த திடீர் மாற்றம் காரணமாக தனியார் வகுப்புகளுக்கு சென்று வீடு திரும்பும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனினும் இவ்வாறான மாற்றம் ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.

Leave a Reply

error: Content is protected !!