முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அட்டன் ரயில் நிலையத்தை ஒளிப்பதிவு செய்தவர் கைது!!

அட்டன் ரயில் நிலையத்தை ஒளிப்பதிவு செய்தவர் கைது!!

அட்டன் ரயில் நிலையத்தை அனுமதியின்றி வீடியோ ஒளிப்பதிவு செய்த நபரை ரயில் நிலைய அதிகாரிகள் கைது செய்து அட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

21.11.2017 மாலை கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே ரயிலை ஒளிப்பதிவு செய்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமாக நபர் ஒருவர் வீடியோ ஒளிபதிவு செய்துகொண்டிருந்ததை அவதானித்த அட்டன் ரயில் நிலைய அதிகாரிகள் விசாரித்தபோது தான் ஊடகவியலாளர் என தெரிவித்த போதும் ஊடகவியலாளருக்கான அடையள அட்டையோ அல்லது அதற்கான ஆவணங்களோ இல்லாத நிலையில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் கமராவை பரிமுதல் செய்ததுடன் 199. அவசர பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

01 (3)

 

 

 

 

 

முறைபாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த அட்டன் பொலிஸார் குறித்த நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணைகளின் பின்னர் எச்சரிக்கை விடுத்து விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

error: Content is protected !!